உலகளவில் தலைசிறந்த நிறுவனங்களைத் தொகுத்து Global Brand Consultancy Interbrand's annual Ranking என்ற பட்டியல் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுவது வழக்கம். அதேபோல இந்தாண்டு வெளியான பட்டியலில் பலருக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக ஃபேஸ்புக் நிறுவனம் தலைசிறந்த 10 நிறுவன பட்டியலில் இடம்பெறவில்லை.
இந்தப் பட்டியலில் ஆப்பிள் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட், கோகோ கோலா நிறுவனங்கள் முறையே இரண்டு, மூன்று, நான்கு, ஐந்தாம் இடம் வரை பெற்றுள்ளன. கேம்பிரிட்ஜ் அனாலிடிகா உள்ளிட்ட தகவல் திருட்டு புகார்களில் ஃபேஸ்புக் நிறுவனம் தொடர்ந்து சிக்கிவருவதே இந்தச் சறுக்கல்களுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
மேலும், ஃபேஸ்புக் நிறுவனம் மிகப்பெரிதாக இருப்பதால் போட்டியாளர்களை நசுக்குவதாகவும் எனவே ஃபேஸ்புக்கை சிறு சிறு நிறுவனங்களாகப் பிரிக்க வேண்டும் என்றும் பல அமெரிக்க சட்ட வல்லுநர்கள் வலியுறுத்திவருகின்றனர்.
இரு ஆண்டுக்கு முன் இந்தப் பட்டியலில் ஃபேஸ்புக் நிறுவனம் எட்டாவது இடத்திலிருந்தது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: அடுத்த லெவலுக்குப் பாய்ந்த சியோமி மொபைல்கள்!