ETV Bharat / lifestyle

அரசுக்குத் துணை போகும் ‘கூ’ செயலி - யாருக்கானது இது?

தொடக்கமே வலதுசாரித் தளம் என்ற பார்வை ‘கூ’ செயலி மீது விழுந்துள்ளது. மத்திய அரசு தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் ட்விட்டர் தளத்தில் பகிரப்பட்டு வரும் நிலையில், மத்திய அமைச்சர்கள், அமைச்சக அலுவலர்கள், பிரபலங்கள், திடீரென 'கூ' என்ற மைக்ரோ ப்ளாகிங் சமூக வலைத்தளத்திற்கு இடம்பெயரத் தொடங்கியுள்ளனர்.

கூ ட்விட்டர், is koo app user data safe, koo app, கூ செயலி, கூ ஆப், tech facts, tech news in tamil, technology news in tamil, koo app tamil, கூ செயலி பாதுகாப்பானதா
is koo app user data safe
author img

By

Published : Feb 15, 2021, 9:25 PM IST

சென்னை: பிரதமரின் ஆத்மநிர்பார் திட்டம் மூலம் தற்சார்பு இந்தியாவைக் கட்டமைக்க இந்திய தயாரிப்புகளை ஊக்குவிப்பதில் அரசு முனைப்புக் காட்டி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியும் தனது மன்-கி-பாத் உரையில் கூ செயலி குறித்து பாராட்டு தெரிவித்து இருந்தார். இந்திய பயனாளர்களைக் கவரும் வகையில் இந்திய மொழிகள் ஆதரவுடன் உருவாக்கப்பட்டுள்ள இத்தளத்தில் பெரும்பாலும் பாஜக-வினரும், வலதுசாரி ஆதரவாளர்களும் இணைந்துள்ளனர்.

மேலும், இந்த செயலியை தரவிறக்கம் செய்த பயனர்கள் சிலர், இச்செயலியை நிறுவிய உடன் தங்கள் அனுமதியின்றி, தானாகவே ‘கூ’ செயலியின் அதிகாரப்பூர்வப் பக்கத்தை பின் தொடர்வதாக புகார்கள் தெரிவித்துள்ளனர். ட்விட்டர் பக்கத்தில் கூட, அவர்களின் அதிகாரப்பூர்வ பக்கத்தை நம் அனுமதியின்றி பின் தொடர வைக்க இயலாது. அந்த வகையில் இங்குப் பயனரின் தனியுரிமை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

‘கூ’ செயலிக்கு மாறும் அமைச்சகங்கள், பிரபலங்கள் பின்னணி என்ன?

விவசாயிகள் போராட்டம் தொடர்பான கருத்துகளை பகிர்ந்த முக்கிய கணக்குகளை முடக்க மைக்ரோ ப்ளாகிங் தளமான ட்விட்டருக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது. விவசாயிகள் போராட்டம் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பதிவிட்ட ட்வீட்டுகளையும், விவசாயிகளைப் போராட்டத்திற்குத் தூண்டும் ட்விட்டர் கணக்குகளையும் நீக்க மத்திய அரசு பரிந்துரை செய்திருந்தது. ட்விட்டர் நிறுவனம் அரசு தரப்பை சந்தித்து விளக்கம் அளிக்க முயன்ற நிலையில், மத்திய தகவல் அமைச்சகம் சந்திக்க மறுத்து விட்டது.

ட்விட்டர் நிறுவனம் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் வெளிப்படைத் தன்மையோடு நடுநிலையாக செயல்படுவதே நோக்கம் எனவும், முழு பேச்சு சுதந்திரம் அளிப்பதால் உடனடியாக முழுவதையும் முடக்க முடியாது எனவும் விளக்கமளித்துள்ளது.

அரசின் உத்தரவுப்படி கணக்குகளை ட்விட்டர் நீக்க மறுத்து விளக்கம் கொடுத்ததால் அதிருப்தியடைந்த மத்திய அரசு, தன் அலுவலர்கள், அமைச்சகர்களை ‘கூ’ செயலியை உபயோகிக்க ரகசிய உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து அரசு தொடர்பான அமைச்சகங்கள், அலுவலர்கள் அனைவரும் ‘கூ’ செயலியைப் பயன்படுத்தத் தொடங்கினர். எனினும், ட்விட்டரில் இருந்தும் இந்த கணக்குகள் வெளியேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டரை பாதிக்குமா ‘கூ’ வின் வருகை

ட்விட்டர் தளத்தில் உலகம் முழுவதிலும் இருந்து பல பில்லியன் பயனாளர்கள் உள்ளனர். ‘கூ’ செயலி இந்தியாவிற்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்ந்து வருகிறது. ட்விட்டர் நிறுவனம் தகவல் பரிமாற்றத்தை உறுதி செய்தல், செயற்கை நுண்ணறிதல் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களை உபயோகித்து வருவதால், அதனுடன் ‘கூ’ ஈடு கொடுப்பதென்பது சவாலான ஒன்றாகக் கருதப்படுகிறது.

ஆனால், இந்தியச் சூழலுக்கு ஏற்ப கூ செயலியின் செயல்பாடுகள் இருக்கும் என சைபர் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இதன் நிறுவனர்களும், உயர் பொறுப்பில் உள்ளவர்களும் ஆளும் பாஜக-வுக்கு ஆதரவாளர்வர்கள் என்பது தெரிந்ததே என்று கூறும் அவர்கள், இந்த புதிய செயலியை வரவேற்று அதில் இணைந்துள்ளவர்கள் பாஜக-வினரும், அதன் தீவிர ஆதரவாளர்கள் என்பது தெளிவுபட தெரிகிறது என்று கூறியுள்ளனர். இதனால் இத்தளன் மீது அரசியல் சாயம் விழுந்துள்ளது.

எதிர்க்கட்சியினர் கருத்து

இது குறித்துப் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும் முன்னாள் ஐஏஎஸ் அலுவலர் சசிகாந்த் செந்தில், “உலகம் முழுவதும் உள்ள மக்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிக்க அவர்களுக்கு அனைத்து விதமான உரிமையுள்ளது. ட்ரம்ப் அரசு கூட இது போன்ற தன்னிச்சையான முடிவை எடுக்கவில்லை. இது ஆளும் பாஜக, தனது அதிகார பலத்தைக் காட்டுவதற்கு நடத்தும் நாடகம்” எனப் பகிரங்க குற்றச்சாட்டு வைக்கிறார். ஒரு பக்கமாக செயல்படும் இது போன்ற செயலிகள் நிலைத்து நிற்காது என்றும் தெரிவிக்கிறார்.

வல்லுநர்கள் என்ன நினைக்கிறார்கள்

சைபர் குற்றப்பிரிவு நிபுணர் கார்த்திகேயன் கூ செயலி குறித்துப் பேசும் போது, “ட்விட்டர் அமெரிக்காவைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனமாகும். அதனால் இந்தியக் கொள்கைகளை முழுவதும் உடனே கேட்காது, ஆனால் 'கூ' இந்தியத் தயாரிப்பு என்பதால் இந்திய விதிமுறைகளுக்கு உட்பட்டு முழுமையாக இயங்கும். இந்தியத் தயாரிப்பை ஊக்குவிக்கும் விதமாக ‘கூ’ செயலியை மத்திய அரசு அலுவலர்களும், அமைச்சர்களும் உபயோகிக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்திய தயாரிப்பான 'கூ' செயலிக்கு மாறுவதால் ட்விட்டர் நிறுவனத்திற்கு வருவாய் ரீதியில் எந்தவித பாதிப்பும் இருக்காது. தகவல் தொழில்நுட்ப சட்டம் 69ஏ படி ட்விட்டர் நிறுவனத்தை முடக்க இந்திய அரசிற்கு முழு அதிகாரம் இருக்கிறது. அதே நேரம் தனது நிறுவனத்தின் கொள்கைப்படி செயல்படுவதை ட்விட்டரும் விடாது. ட்விட்டர் இந்திய அரசைப் பகைத்தும் கொள்ளாது.

இன்னும் கொஞ்சம் உள்வட்டமாகப் பார்த்தால், ட்விட்டரிடம் இருக்கும் தொழில்நுட்ப வசதிகள் ‘கூ’ விடம் இல்லை. தேர்தல் தொடர்பான பரப்புரைக்கு ட்விட்டர் முக்கியம் என்பதால் முழு நடவடிக்கையை அரசும் எடுக்க முடியாது எனத் தெரிவித்தார்.

அரசியல் சாயம் பூசப்பட்ட உள்ளூர் தயாரிப்பான 'கூ' எந்த அளவிற்கு இந்தியச் சந்தையில் நிலைத்து நிற்கும் என்பது போகப் போகத் தான் தெரியும் என சமூக வலைத்தள வாசிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.