ஹைதராபாத்: அமெரிக்கா, இங்கிலாந்து, அயர்லாந்து போன்ற நாடுகளில் இன்ஸ்டாகிராம் தனது ’தனிபட்ட நிதி திரட்டல்’ எனும் புது அம்சத்தினை சோதனை செய்துள்ளது. ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் பயனர்கள் ‘நன்கொடை ஸ்டிக்கர்’ மூலம் தங்களின் பங்களிப்பை வழங்க முடியும்.
கரோனா தாக்கத்தினால் டிஜிட்டல் தளத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக பணம் திரட்டுவது அதிகரித்து வருகிறது. இச்சூழலில் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம், பயனர்கள் இந்த நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.
அதனை கருத்தில்கொண்டு, அதற்கான தளத்தை உருவாக்கி தர ஃபேஸ்புக் முன்வந்தது. இதனையடுத்து தங்களின் புகைப்படம் மற்றும் சிறு காணொலிகள் பகிர்வு சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில், தனிப்பட்ட நிதி திரட்டல் அம்சத்தினை சில நாடுகளில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஃபேஸ்புக் மெசஞ்சர் அப்டேட்: குழுவாக மேற்கொள்ளும் வீடியோ அழைப்புகளை நேரலை செய்யலாம்!
இதற்கான கால அளவாக 30 நாட்களும், மேலும் தேவைப்படுமெனில் கூடுதலாக 30 நாட்களும் வழங்கப்படுகின்றன. தேவைப்படுபவருக்கு தங்களின் பங்களிப்பைச் செலுத்தும் பயனர்கள், தங்களில் இன்ஸ்டாகிராம் தகவல்களை மறைத்து வைக்க முடியும் என்றும், ஆனால் அவர்கள் பெயர் பொது வெளியில் தெரியும்படி இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது சில நாடுகளில் மட்டும் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த அம்சங்களை, அதிக பயனர்கள் உள்ள நாடுகளில் விரைந்து செயபடுத்த நிறுவனம் முனைப்புக்காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.