டெல்லி: நாட்டிற்கு எதிரான பரப்புரை, போலி செய்திகளைப் பரப்பும் 35 யூ-ட்யூப் சேனல்கள், இரண்டு இணையதளங்களை முடக்க தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சக செயலாளர் அபூர்வ சந்திரா கூறுகையில், 'இந்த இணையதளங்கள் மற்றும் யூ-ட்யூப் சேனல்கள் பாகிஸ்தானில் இருந்து இயக்கப்படுகின்றன. இந்திய புலனாய்வு அமைப்புகள் இந்த சமூக ஊடக கணக்குகள், இணையதளங்களை உன்னிப்பாகக் கண்காணித்து, உடனடி நடவடிக்கைக்காக அமைச்சகத்திடம் தெரிவித்தது. அதன்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.
மேலும் பின்னர் வெளிவந்த அறிக்கையில், "தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021இன் விதி 16இன் கீழ் வெளியிடப்பட்ட ஐந்து தனித்தனி உத்தரவுகளின்படி, பாகிஸ்தானை இருப்பிடமாகக் கொண்ட இந்த சமூக ஊடகக் கணக்குகள் , இணையதளங்களை முடக்க உத்தரவிட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆன்லைன் தேர்வு மாணவர்களுக்கு பயனா? பாதிப்பா?