டெல்லி: முன்னதாக இந்தியாவில் தடைசெய்யப்பட்ட 59 சீன செயலிகளுடன் தொடர்புடைய மேலும் 47 செயலிகளை மத்திய அரசு தடைசெய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
மின்னணு மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சகத்தின் மூலம் வெளியான தகவலில்படி, கூகுள் ஆப் ஸ்டோரில் உள்ள இந்த 47 செயலிகளுக்கு குறிவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 59 செயலிகளை தடைசெய்த பின்னர், அந்தத் தடை உத்தரவை சரியாக பின்பற்றுமாறும், இல்லையெனின் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு செயலி வடிவமைக்கும் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
டிக்டாக் மாற்று: சில் செய்ய உதவும் Chill 5!
முதலாவதாக அறிவிக்கப்பட்ட சீன செயலிகள் தடை ஆணையில், மக்கள் அதிகம் பயன்படுத்திவந்த டிக்டாக் செயலி இடம்பெற்றிருந்தது.
அதேபோல தற்போது வெளியான தகவலில் உள்ள 47 சீன செயலிகள் தடைப் பட்டியலில் கைப்பேசி விளையாட்டு பிரியர்களின் மனங்களை கொள்ளை கொண்ட ‘பப்ஜி’யும் அடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.