ETV Bharat / lifestyle

சொந்த செயலிக்குத் தடைவிதித்த கூகுள்! - google

கூகுள் நிறுவனம் தனது ஷாப்பிங் செயலியை வரும் ஜூன் மாதம் முதல் நிறுத்திட முடிவுசெய்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Google
கூகுள்
author img

By

Published : Apr 13, 2021, 8:09 AM IST

Updated : Apr 13, 2021, 11:07 AM IST

நாம் ஒரு பொருளை வாங்க விரும்பினால், பல கடைகளுக்குச் சென்று விசாரிப்பது வழக்கம். எங்குக் குறைவான விலையில் கிடைக்கிறதோ வாங்குவோம். அதன்படி, இணையத்திலும் பல வகையான ஷாப்பிங் தளங்கள் உள்ளன. அதில் பல சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கும்.

அவற்றை ஒரே இடத்தில், தேடுவதற்கு உதவியாக இருப்பதுதான் கூகுள் ஷாப்பிங் அம்சம். இதனை ஸ்மார்ட்போனில் செயலியிலும், இணையதளத்திலும் பயனர்கள் பயன்படுத்திவந்தனர்.

இந்நிலையில், ஆண்ட்ராய்டு, ஐஓஎல் ஆகிய இரு இயங்குதளங்களிலும் ஷாப்பிங் செயலியை வரும் ஜூன் மாதம் நீக்குவதாகக் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அடுத்த சில வாரங்களில், ஷாப்பிங் செயலியை ஆதரிக்கப்போவதில்லை. அதற்குப் பதிலாக, இணையத்தில் உபயோகிக்கப்படும் ஷாப்பிங் டேப் வசதியை மேம்படுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.

செயலியில் பொருள்களை வாங்குவதுபோல், கூகுள் மின்னஞ்சலை உபயோகித்துப் பொருள்களை வாங்கிக்கொள்ளலாம். எதிர்காலத்தில், ஷாப்பிங் டேபில் கூடுதல் அம்சங்கள் வழங்கப்படும்.

கூகுள் கணக்கு மூலம், இணையதள விற்பனை மையங்களில் பொருள்களை வாங்கிக்கொள்ள முடியும்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: அதானி குழுமத்துடன் கைக்கோக்கும் ஃபிளிப்கார்ட்!

Last Updated : Apr 13, 2021, 11:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.