ஃபேஸ்புக் நிறுவனம் பயனாளர்களின் தகவலைத் தவறாக உபயோகிப்பதாக நீண்ட நாட்களாகப் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. கடந்த மாதம் கூட பயனாளர்கள் தகவல்களைத் தவறாகப் பயன்படுத்தியதால் அமெரிக்க அரசு ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு ஐந்து பில்லியின் டாலர் அபராதம் விதித்தது.
இந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனம் தங்களது தகவல்களை யாருடன் பகிர்ந்துகொள்கிறார்கள், எந்த இடங்களிலிருந்தெல்லாம் தகவல்கள் பெருகிறது என்பதை வெளிப்படையாக தெரிவிக்க நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக ஃபேஸ்புக்கின் இணை நிறுவனங்களான இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் தளங்களில் ஃபேஸ்புக் தனது பெயரைச் சேர்க்க முடிவு செய்துள்ளது.
தற்போது ஐஃபோனை பயன்படுத்துபவர்களுக்கு சில இடங்களில் 'ஃபேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம்' என்று தெரியத்தொடங்கியுள்ளது. அதேபோல விரைவிலேயே மற்ற சாதனங்களிலும் இந்த அப்டேட் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபேஸ்புக் நிறுவனம் இன்ஸ்டாகிராமை 2012ஆம் ஆண்டும், வாட்ஸ் அப்பை 2014ஆம் ஆண்டு வாங்கியது குறிப்பிடத்தக்கது.