உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கரோனா வைரசால் மக்கள் ஏற்கனவே அச்சத்தில் உள்ளனர். சமூக வலைதளங்களில் எங்கு பார்த்தாலும் கரோனா வைரஸ் குறித்த செய்திகளே வலம்வருகின்றன.
உலக சுகாதார நிறுவனம் கரோனா வைரஸ் குறித்து சரியான தகவல்களை மக்களுக்கு அளித்துவருகிறது. இருந்தாலும் மறுபக்கம் கரோனா வைரஸ் குறித்து தவறான தகவல்களும், வதந்திகளும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகின்றன. குறிப்பாக, சில இணையதளங்களில் வெளியாகும் வதந்திகள் மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்துகின்றன.
இந்நிலையில், பரப்பப்படும் செய்திகளின் நம்பகத்தன்மையைப் பயனாளர்கள் அறிந்துகொள்ளும் வகையில், கூகுள் செய்திகள் புதிய பிரிவு ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
-
To help address potentially harmful misinformation, we've launched a new section in our Google News COVID-19 experience that highlights articles from independent fact-checkershttps://t.co/O0GBxSqCAc pic.twitter.com/cGhtthyHED
— Google News (@googlenews) April 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">To help address potentially harmful misinformation, we've launched a new section in our Google News COVID-19 experience that highlights articles from independent fact-checkershttps://t.co/O0GBxSqCAc pic.twitter.com/cGhtthyHED
— Google News (@googlenews) April 24, 2020To help address potentially harmful misinformation, we've launched a new section in our Google News COVID-19 experience that highlights articles from independent fact-checkershttps://t.co/O0GBxSqCAc pic.twitter.com/cGhtthyHED
— Google News (@googlenews) April 24, 2020
இது குறித்து கூகுள் செய்திகள் தனது ட்விட்டர் பக்கத்தில், "கரோனா வைரஸ் குறித்து வெளியாகும் தவறான தகவல்களைத் தெரிந்துகொள்ளும்விதமாக பயனாளர்களுக்கு கூகுள் செய்திகள் புதிய பிரிவு ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தப் புதிய பிரிவின் மூலம் பயனாளர்கள் கரோனா வைரஸ் குறித்து நம்பகத்தகுந்த செய்திகளை அறிந்துகொள்ளலாம்" என்று குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: கோடிக்கணக்கான பயனர்களுக்குக் கூகுள் நிறுவனம் வேண்டுகோள்!