ETV Bharat / lifestyle

"Thug life" என்று இனியும் சொல்வீர்களா? அது ஒன்றும் பெருமையான சொல் அல்ல!

”சமூக வலைதளங்களில் தங்களது புகைப்படங்களை பதிவேற்றியும் தங்களுக்கு பிடித்தமான நடிகர்கள் மற்றும் தலைவர்கள் கூறிய கருத்துகளுடனும் "Thug life" என்ற வார்த்தையை இணைத்து நீங்கள் கூறுவீர்களேயானால் உங்களையும் அவர்களையும் ”கொள்ளையடிக்கும் கொலைகாரர்கள்” என்று மறைமுகமாக கூறுவதற்குச் சமம்.”

author img

By

Published : Jul 27, 2019, 9:41 PM IST

துரைமுருகன்

ஏதோ ஒரு அரசியல்வாதியோ, நடிகரோ பொதுவெளியில் அநாயசமாக யாரையாவது கிண்டல் செய்த காணொலியில் அவர்களது வாயில் சிகரெட்டை வைத்தும் கண்ணாடி மற்றும் சங்கிலியை மாட்டிவிட்டும், “thug life" என்று எடிட் செய்து சமூக வலைதளத்தில் பதிவேற்றும் கலாசாரம் இப்போது பெருகிவருகிறது.

வடிவேலு
வடிவேலு

இன்னும் சிலர், தங்கள் புகைப்படத்தைப் பதிவேற்றி “thug life" என்று பெருமையாகப் போட்டுக்கொள்கின்றனர். உண்மையில் thug life என்ற வார்த்தை பெருமைக்குரிய வார்த்தைதானா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்வோம்.

”thug life” என்பது ஆங்கில சொல்லா?

நிறைய பேர் இதனை ஆங்கில சொல் என்றே நினைத்துக்கொண்டிருக்கின்றனர். உண்மையில் ’thug life’ ஆங்கில சொல் அல்ல. ஆம், அது இந்தியாவிலிருந்து சென்ற ஒரு வார்த்தையாகும். இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தபோது “thagi" என்ற குழு இயங்கி வந்துள்ளது. அதன் பெயரே ”thug” என்று மருவியுள்ளது.

thagee
thagee

”thagi” எனும் கொடூரக் குழு:

thagi என்பது கொடூரமாகக் கொலை செய்து கொள்ளையடிக்கும் மிகப்பெரிய கும்பலின் பெயர். இந்தக் கொடூர குழுவில் உள்ளவர்கள் சாதாரண பயணிகளைப்போல் பயணம் செய்து (travelers) கொள்ளையடிப்பார்கள். இவர்கள் குறிப்பிட்ட மதத்திற்குள் அடைந்துகொள்ளாமல் சூழலுக்கு தகுந்தவாறு எந்த மதத்தை வேண்டுமானாலும் கூறிக்கொள்வார்கள்.

கொலை செய்யும் தக்கி
கொலை செய்யும் தக்கி

மேலும், சக பயணிகளிடம் நெருக்கமாகப் பழகி அவர்களுடன் போலியான நல்லுறவை வளர்த்துக்கொள்வார்கள். ஒரு கட்டத்திற்குப் பின்னர், சக பயணிகளைக் கொடூர முறையில் கழுத்தை அறுத்து கொலை செய்து பயணிகளின் பொருட்கள் மற்றும் உடைமைகளைக் கொள்ளையடித்துவிட்டுத் தப்பிச் சென்றுவிடுவார்கள். இதுபோன்ற ஒரு குழுவைத்தான் சமீபத்தில் “தீரன் அதிகாரம்-1” என்ற தமிழ்ப் படத்தில் காட்சிப்படுத்தியிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தீரன் அதிகாரம் ஒன்று
தீரன் அதிகாரம் ஒன்று

thagi-களை கண்டுபிடிக்க தனித்துறை:

இந்தத் துறை ஆங்கிலேயர் காலத்தில்தான் தீவிரமாகச் செயல்பட்டது. இந்தக் குழுவினருக்கு எந்த ஒரு அடையாளமும் இல்லாததால் அவர்களை கண்டுபிடிப்பதில் ஆங்கிலேயர்கள் திணறினர். இந்த சூழலில்தான் இக்குழுவினரைக் கண்டறியத் தனியாக ஒரு காவலர் துறை (தக்கர்டி) அமைக்கப்பட்டது. அந்தக் துறை ஏராளமான thagi-களை சிறைபிடித்து அவர்கள் பாணியிலேயே துடிதுடிக்கக் கொன்றனர்.

தூக்கிலிடுதல்
தூக்கிலிடுதல்

அவர்களுக்கு ஏன் மரண தண்டனை?

அடிப்படையில் எந்தவொரு குற்றத்திற்கும் மரண தண்டனை ஒரு தீர்வாகாது. இருப்பினும், இவர்களுக்கு மரண தண்டனை அளித்ததில் நியாயம் இருப்பதாகவே பலர் கூறுகிறார்கள். ஏனெனில், thagi குழுவிலிருந்த ஒருவர் மட்டுமே 200க்கும் மேற்பட்ட மக்களைக் கொலை செய்துள்ளார். இவர்களையெல்லாம் வெளியில் விட்டால் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்று கருதித்தான் ஆங்கிலேயர்கள் தூக்குத் தண்டனையை நிறைவேற்றியுள்ளனர் என கூறப்படுகிறது. thagi-களை முழுமையாக அழித்துவிட்டோம் என்று நம்பிய பின்புதான் ஆங்கிலேயர்களால் ஆரம்பிக்கப்பட்ட ”தக்கர்டி” என்ற காவலர் துறை சென்ட்ரல் க்ரைம் என்ற வேறு பெயரை பெற்றது.

Thug என்ற ஆங்கில வார்த்தை அறிமுகம்:

thagi குழுவைப் பற்றி பிலிப் டெய்லர் என்பவர் “confession of a thug"(ஒரு தக்கியின் வாக்குமூலம்) என்ற புத்தகத்தை எழுதினார். இந்த புத்தகம் அதிக பிரதிகள் விற்ற பின்தான் "Thug" என்ற வார்த்தை மிகப் பிரபலமானது.

தக்கிகளை பற்றிய புத்தகம்
தக்கிகளை பற்றிய புத்தகம்

Thug என்று இனியும் சொல்வீர்களா?

சமூக வலைதளங்களில் தங்களது புகைப்படங்களைப் பதிவேற்றியும் தங்களுக்கு பிடித்தமான நடிகர்கள் மற்றும் தலைவர்கள் கூறிய கருத்துகளுடனும் "Thug life" என்ற வார்த்தையை இணைத்து நீங்கள் கூறுவீர்களேயானால் உங்களையும் அவர்களையும் ”கொள்ளையடிக்கும் கொலைகாரர்கள்” என்று மறைமுக கூறுவதற்குச் சமம். இனியும் ”thug life” என்று கூறுவீர்களா என்ன?

Intro:Body:

Thug Life

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.