ETV Bharat / state

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்ட 3 பேருக்கு ஜாமீன்? - காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

பகுஜன் சமாஜ் கட்சி ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்ட 3 பேர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு, காவல்துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங்
ஆம்ஸ்ட்ராங் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 18, 2024, 9:00 AM IST

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவத்தில், தொடர்புடைய பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு மற்றும் ரவுடி நாகேந்திரன் அவரது மகனும் காங்கிரஸ் பிரமுகருமான அஸ்வத்தாமன் உள்ளிட்ட 28 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைதான திருவேங்கடம் காவல் துறையினரிடம் இருந்து தப்பி செல்ல முயன்றபோது, காவல்துறையால் என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்நிலையில், தலைமறைவாக இருந்து வரும் ரவுடி சம்போ செந்தில், வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் ஆகியோரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் கைதானவர்கள் மீது இதுவரை 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை எழும்பூர் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.

இதையும் படிங்க: "சித்தா படித்த மருத்துவர்கள் அலோபதி மருத்துவம் செய்ய எந்த தடையும்" - சென்னை உயர்நீதிமன்றம்

தற்போது, இந்த வழக்கில் கைதான சென்னை கோடம்பாகத்தைச் சேர்ந்த விக்னேஷ்குமார், விஜயகுமார், திருவள்ளூர் நத்தமேடு காலனியைச் சேர்ந்த சதீஷ்குமார் ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், "தங்களுக்கும், ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை. எனவே, தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும். நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்பதாகவும்" தெரிவித்துள்ளனர்.

இந்த மனுவானது முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாமீன் மனு தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் இருந்து விளக்கம் பெற்றுத் தெரிவிப்பதற்காக கூறி வழக்கை அக்.18 ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.