ETV Bharat / lifestyle

சூரிய கிரகணம்: சிறப்பு ராசி பலன் 26-12-2019 - Daily astrology

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் நகரும்போது உருவாகும் நிகழ்வே சூரிய கிரகணம் என்பார்கள். அந்த வகையில் இன்று (26-12-2019) காலை 8:05 மணியில் இருந்து 11:30 வரை சூரிய கிரகணம் நிகழும் என ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர். இதையொட்டி, 12 ராசியினருக்கு ஏற்படும் நன்மை, தீமை குறித்து பார்க்கலாம்...

astrology  தினசரி ராசிபலன்  டிசம்பர் 26 சூரிய கிரகணம்  ராசிபலன்  Daily Razibalan  Daily astrology  Dec. 26 solar eclipse
astrology
author img

By

Published : Dec 26, 2019, 7:42 AM IST

Updated : Dec 26, 2019, 10:33 AM IST

நாள் - 26.12.2019

அமாவாசை
விகாரி 2019
மார்கழி 10
சூரிய உதயம் காலை 6.47
சூரியன் மறைவு மாலை 5.45

மேஷம்
வாழ்க்கையில் புதிய தெம்பு பிறக்கும். உத்வேகத்துடன் வேலைகளை செய்வீர்கள். வெளியில் எங்கேயாவது செல்ல விரும்பினால் திட்டமிட்டு செல்லுங்கள். சாதிக்க விரும்பும் பாதையை உறுதியாக வைத்துக் கொள்ளுங்கள். பரபரப்பாக இருக்க வேண்டாம்.

ரிஷபம்
பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பணவரவு கூடும். திருமண பேச்சுவார்த்தையில் அனுகூலமான நிலை ஏற்படும். சொத்து வாங்கலாம். விலகி சென்ற உறவினர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்களுக்கு சாதகமான நிகழ்வு நடக்கும்.

மிதுனம்
இன்று உ ங்களுக்கு புதிய யோசனைகள் பிறக்க போகிறது. எனினும் உங்களை நீங்களே உயர்த்திக்கொள்ள வேண்டாம். உங்கள் மீது பிறருக்கு நம்பிக்கை பிறக்கும். ஆயினும் சோதனைகள் மீதமுள்ளது. ஒரே நேரத்தில் மில்லியன் விவகாரங்களில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக ஒரு வேலையை உருப்படியாக செய்யுங்கள்.

கடகம்
கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளால் பெற்றோருக்கு கௌரவம் ஏற்படும். நீண்ட கால நிலுவையில் இருந்த வழக்குகள் சாதகமாகக் கூடும். ஆன்மிக அறிஞர்கள் நட்பு கிடைக்கும். அனுபவ அறிவை பயன்படுத்துங்கள்.

சிம்மம்
சோர்வு நீங்கி சுறுசுறுப்பு பிறக்கும். பெண்களுக்கு சாதகமான நிலை ஏற்படும். கணவனிடம் மனம் விட்டு பேசுவீர்கள். எதிர்பார்த்த மாதிரி வீடு கட்ட யோகம் உண்டாகும். ஆபரணங்கள் வாங்க வாய்ப்புண்டு. தொடர் முயற்சிகளில் கவனம் தேவை.

கன்னி
வங்கிக் கடன் கைக்கூடும். திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடக்கும். கணவர்-மனைவி இடையே வழக்கத்தை விட அன்யோன்யம் அதிகரிக்கும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். சகோதரர் வழியில் நன்மை உண்டு. வேலையில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். வரவு அதிகரிக்கும். புதிய திட்டங்களை நிறைவேற்றும் நேரமிது. நினைப்பதை நிறைவேற்றுங்கள்.

துலாம்
சின்ன சின்ன விஷயங்களிலும் கவனம் செலுத்துங்கள். நேரத்தை வீணடிக்க வேண்டாம். உங்களது இலக்கை நோக்கி வேலைகளை தொடங்குங்கள். செல்வாக்கு உயரும் நேரமிது. சாதுர்யமாக பேசி சாதித்து விடுங்கள். பணவரவு உண்டு. திருமணமான பெண்கள் கணவனின் காதல் பேச்சுகளால் மனம் குளிர போகிறீர்கள். யாருடனும் வீண் வாக்குவாதம் வேண்டாம்.

விருச்சகம்
உங்களுக்கு நேற்று சிறிது மனஅமைதி கிடைத்திருக்கும். இன்று புதிய உத்வேகத்தில் செயல்பட, அது உங்களுக்கு உதவிக்கரமாக இருக்கும். காரியத்தை திடமுடன் தொடங்குங்கள். பிரச்னை பற்றி கவலைக்கொள்ள வேண்டாம். வரும் வாரங்களில் இலக்குகளை நோக்கி திறம்பட செயல்படுவீர்கள். நீண்ட கால நண்பரை சந்திப்பீர்கள். உறவினர்களுடன் இருந்து வந்த கசப்புணர்வு நீங்கும். பேச்சில் நிதானம் தேவை.

தனுசு
உங்களுக்கு இந்த நாள் மிகவும் உத்வேகத்தை அளிக்கும். வாழ்க்கைக்கு தேவையானவற்றை பற்றி சிந்தியுங்கள். கடந்த கால லட்சியங்களை கூட நிறைவேற்றும் யோகம் உண்டாகும். பூர்விக சொத்துகளில் நிலவி வந்த பிரச்னை தீரும். கணவரிடம் கவனமாக பேசுங்கள். எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும்.

மகரம்
புதிய முயற்சிகள் சாதகமாகும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. உங்களிடம் ஒளிரும் விளக்கு உள்ளது. அதற்கு எல்லாவித பிரச்னையும் தீர்க்கும் சக்தி உண்டு. அதனை பயன்படுத்திக்கொள்ள தவறாதீர்கள்.

கும்பம்
இலக்கு விஷயத்தில் சிறிய குழப்பம் ஏற்பட்டு நீங்கும். எண்ணத்தில் கவனம் தேவை. அனைத்து பிரச்னைகளும் உரிய தீர்வு, சரியான நேரத்தில் வரும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் புதிய நுணுக்கங்களை கற்று அறிவீர்கள். வழக்கில் வெற்றி கிட்டும். கணவன்-மனைவி அன்யோகத்தை அதிகரிக்கும் விஷயம் ஒன்றும் நடக்கும்.

மீனம்
மனதை ஒருநிலைப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள். காலை நேரத்தில் யோகா செய்யலாம். இந்த வாரம் நீங்கள் நிறைய வேலைகளை செய்வீர்கள். அறிவை பயன்படுத்துங்கள். உணர்ச்சிவசப்பட வேண்டாம். கணவரிடம் ஆறுதலாக பேசுங்கள். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்க யோகமுண்டு. நல்ல முடிவுகளை எடுக்கும் நேரமிது...!

Intro:Body:

astrology 

Conclusion:
Last Updated : Dec 26, 2019, 10:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.