ETV Bharat / lifestyle

டிவிஎஸ் மூன்று சக்கர வாகன விற்பனை சரிவு...!

சென்னை: டிவிஎஸ் மோட்டர்ஸ் நிறுவனத்தின் மூன்று சக்கர வாகன விற்பனை நவம்பர் மாதத்தில் கடும் சரிவைச் சந்தித்துள்ளது. இருந்தபோதிலும், நிறுவனத்தின் வாகன விற்பனை 21 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

TVS Three wheeler sale gets down
TVS Three wheeler sale gets down
author img

By

Published : Dec 1, 2020, 6:18 PM IST

கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 2 லட்சத்து 66ஆயிரத்து 582 டிவிஎஸ் மோட்டர்ஸ் நிறுவன வாகனங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு (2020) நவம்பர் மாதத்தில் 3 லட்சத்து 22ஆயிரத்து 709 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதில் நிறுவனத்தின் பிரதான தயாரிப்பான இருசக்கர வாகன விற்பனை 25 சதவிகிதம் அதிகரித்து, 3லட்சத்து 11ஆயிரத்து 519 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.

இதன் மூலம் உள்நாட்டு விற்பனை 30 சதவிகிதம் உயர்வு கண்டுள்ளது. அதுமட்டுமின்றி, மோட்டர் இருசக்கர வாகனங்களின் விற்பனை 26 சதவிகிதமும், ஸ்கூட்டர் விற்பனை 26 சதவிகிதமும் உயர்ந்துள்ளது. இருந்தபோதிலும் அந்த நிறுவனத்தின் மூன்று சக்கர வாகன விற்பனை கடந்தாண்டு நவம்பரில் 35 சதவிகிதம் வரை சரிவைச் சந்தித்துள்ளது.

ஏற்றுமதி பாதிப்பு

கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, நிறுவனத்தின் ஏற்றுமதி பாதிப்பைச் சந்தித்துள்ளது. நிறுவனத்தின் மொத்த ஏற்றுமதியில் குறைந்தளவு சரிவைச் சந்தித்துள்ளது. இருப்பினும், இருசக்கர வாகன ஏற்றுமதி 10 ஏற்றமடைந்துள்ளது. கண்டெய்னர்கள் கிடைக்காதது, நிவர் புயல் பாதிப்பு காரணமாக, சென்னை துறைமுக பணிகள் நிறுத்தப்பட்டன ஆகியவற்றால் ஏற்றுமதி பாதிப்படைந்துள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

இதையும் படிங்க...ஊழியர்களுக்கு சிறப்பு போனஸ் அறிவித்த அமேசான்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.