அட்சய திருதியை அன்று நகைக்கடைகளில் நகை வாங்குபவர்களின் கூட்டம் அலைமோதும். அப்படி அலைமோதும் மக்களின் பார்வைக்காக அட்சய திருதியை குறித்து வியக்க வைக்கும் விஷயங்களை வைக்கிறோம். பின்வருமாறு:
- ஜெயின் இனத்தவர்களுக்கு அட்சய திருதியை புனித நாளாகும்.
- வட இந்தியர்கள் நீண்டதூர புனிதப் பயணங்களை அட்சய திருதியை நாளில்தான் தொடங்குவார்கள்.
- ஒடிசாவில் வீடு கட்ட, கிணறு தோண்ட சிறந்த நாளாக அட்சய திருதியை நாளைத்தான் தேர்ந்தெடுப்பார்கள்.
- பிகார், உத்தரப்பிரதேசத்தில் நெல் விதைப்பை அட்சய திருதியை தினத்தன்று தொடங்குவார்கள்.
- அட்சய திருதியை நன்னாளில்தான் உணவுக் கடவுளான அன்னப்பூரணி அவதரித்தாள்.
- அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க இயலாதவர்கள் உப்பு வாங்கினால்கூட போதும். தங்கம் வாங்குவதற்குரிய பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
- அட்சய திருதியை தினத்தன்றுதான் பிரம்மா, உலகை படைத்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.
- அட்சய திருதியை நாளில்தான் மதுரை மீனாட்சியை சுந்தரேஸ்வரர் மணந்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.
- அமாவாசைக்கு மூன்றாவது நாள் அட்சய திருதியையன்று மூன்றாம் எண்ணுக்கு அதிபதி குரு, உலோகத்தில் தங்கத்தை பிரதிபலிக்கிறார். எனவே குருவுக்கு `பொன்னன்’ என்ற பெயரும் உண்டு. இதனால்தான் அட்சய திருதியை நாளில் பொன் வாங்குவது சிறப்பு பெறுகிறது.
- ஒரு தடவை சாபம் பெற்றதால் சந்திரன் தேய்ந்து தேய்ந்து அமாவாசை ஆகிவிட்டார். மனம் திருந்திய சந்திரன் அட்சய திருதியை தினத்தன்று அட்சயவரம் பெற்றார். மீண்டும் அட்சய தினத்தில் இருந்து வளரத் தொடங்கினார்.
- அரிதான வேலையை சந்திப்பதை `அலப்ய யோகம்‘ என்கிறது சாஸ்திரம். அட்சய திருதியை, அலப்ய யோகத்தில் சேரும். ஆகவே அரிதான அட்சய திருதியை தவறவிட்டால் பிறகு ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்.
- அட்சய திருதியைக்கு இன்னொரு காரணமும் சொல்வர். அதாவது அடிபடாத இரண்டாக உடையாத முழு அரிசிக்கு `அட்சதை’ என்று பெயர். சதம் என்றால் அடிப்பட்டு ஊனமாகாதது என்றும் அர்த்தம் உண்டு. அட்சதையால் அட்சயனை மதுசூதனை வணங்குவதால் அந்த திதிக்கு `அட்சய திருதியை’ எனும் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது புராணம்.
- அட்சய திருதியை தினத்தை சமணர்கள் “அட்சய தீஜ்’’ என்றழைக்கிறார்கள்.
- ரிஷபதேவர் என்னும் தீர்த்தங்கரரின் நினைவு நாளாக அட்சய திருதியை தினத்தை சமணர்கள் அனுசரிக்கிறார்கள்.
- அட்சய திருதியை விரதத்தை முதன் முதலில் கடைப்பிடித்தவர் மகாதயன் என்ற வியாபாரி ஆவார்.
- மகாலட்சுமியின் பரிபூரண அருளை ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்பதே அட்சய திருதியை பண்டிகையின் முக்கிய நோக்கமாகும்.
இது போன்றும் இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை மூன்றாம் பாகத்தில் காணலாம்.
அட்சய திருதியை... வியக்க வைக்கும் விஷயங்கள் - பாகம் 1