ETV Bharat / jagte-raho

சிறுமியை மணக்க தடையாக இருந்த மூதாட்டி படுகொலை: இளைஞர் தலைமறைவு - The young man who killed the grandmother

கன்னியாகுமரி: குமாரபுரம் அருகே 16 வயது சிறுமியை மணக்க தடையாக இருந்த மூதாட்டியை கொலை செய்த இளைஞரை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

murder
murder
author img

By

Published : Nov 2, 2020, 1:54 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் பகுதியைச் சேர்ந்தவர் கமலம் (65) . கணவர் இறந்த நிலையில், தனது மூத்த மகளான பெருஞ்சிலம்பு பகுதியில் வசித்து வரும் ராஜம் (45) என்பவர் வீட்டில் தனியாக கொட்டகை அமைத்து வசித்து வந்தார். இவர் நாள்தோறும் மலைப்பகுதியில் விறகு வெட்டும் பணிக்குச் சென்று விட்டு மாலை வீடு திரும்புவது வழக்கம்.

அதேபோன்று இன்று காலை விறகு வெட்டும் பணிக்கு செல்லும்போது, அங்கே வந்த இளைஞர் ஒருவர் மூதாட்டியை கழுத்தறுத்து கொலை செய்து தப்பியோடினார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த உறவினர்கள் உடனடியாக கொற்றிகோடு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இறந்து கிடந்த மூதாட்டியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், மூதாட்டியை கொலை செய்தது அவரது மூத்த மகளான ராஜம் என்பவரின் மூத்த மகளான மாரியம்மாளின்) என்பவரது கணவர் ராஜா(30) என்பது தெரிய வந்தது.

மாரியம்மாளும், கூலித் தொழிலாளியான ராஜா(30) என்பவரும் கடந்த ஏழு வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இருவருக்கும் குழந்தை இல்லாததால், தற்போது 12ஆம் வகுப்பு படித்து வரும் மனைவியின் தங்கையை திருமணம் செய்து தர வேண்டும் என பெண் வீட்டாரிடம் கடந்த இரண்டு மாதமாக ராஜா தொல்லை கொடுத்துள்ளார்.

இந்நிலையில், சிறுமியை திருமணம் செய்ய மூதாட்டி தடையாக இருந்ததால் அவரை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து மூதாட்டியை கொலை செய்து தப்பியோடிய ராஜாவை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 18-வயதுக்கு முன்பே ராஜாவை திருமணம் செய்து கொண்ட மாரியம்மாளையும் அழைத்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: வறுமையால் நேர்ந்த சோகம்: குழந்தைகளுக்குத் தூக்க மாத்திரை கொடுத்துவிட்டு தாயும் தீக்குளிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.