ETV Bharat / jagte-raho

குடிக்க பணம் கேட்ட மகன் - அடித்துக் கொன்ற தாய்! - அடித்துக் கொன்ற தாய்

சென்னை: மது அருந்த பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனை அடித்துக் கொலை செய்த தாய் மற்றும் சகோதரரை காவல்துறையினர் கைது செய்தனர்.

murder
murder
author img

By

Published : Jan 24, 2020, 12:44 PM IST

சென்னை கீழ்ப்பாக்கம் புல்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முரளி ( 23). இவர் அதேப் பகுதியைச் சேர்ந்த பரிமளா என்ற பெண்ணை காதலித்து 3 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் தினம்தோறும் மது அருந்திவிட்டு பிரச்னை செய்ததால், மனைவி பிரிந்து சென்றுள்ளார்.

பின்னர், தாய் கொண்டம்மாள் (52) மற்றும் அண்ணன் கிரிபாபு (26) ஆகியோருடன் முரளி வசித்து வந்தார். பிரிந்துபோன மனைவியை பல முறை அழைத்தும் வரவில்லை என்ற மன உளைச்சலில் இருந்த முரளி, தினமும் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் முரளியின் தாய் மற்றும் அண்ணன் புகார் ஒன்றை அளித்தனர். அதில், மதுபோதையில் இருந்த முரளி சுவர் மீது மோதி இறந்துவிட்டதாக கூறினர்.

இதில் சந்தேகமடைந்த காவல்துறையினர், இருவரிடமும் நடத்திய தீவிர விசாரணையில், மது அருந்துவதற்காக தாய் கொண்டம்மாள் மற்றும் அண்ணணிடம் முரளி பணம் கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், இதனால் கோபமடைந்த தாய் கொண்டம்மாளும், அண்ணன் கிரிபாபுவும், முரளியை உருட்டு கட்டையால் தலையில் அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக கொண்டம்மாள் மற்றும் கிரிபாபுவை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சுங்கச்சாவடி காவலர் அடித்துக் கொலை - வழிப்பறி கொள்ளையர்கள் அட்டூழியம்

Intro:Body:குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் தம்பியை அடித்து கொலை செய்த அண்ணன் மற்றும் தாய்..

சென்னை கீழ்ப்பாக்கம் புல்லாபுரம் பகுதியில் வசித்து வருபவர் முரளி( 23).இவர் அதே பகுதியை சேர்ந்த பரிமளா என்ற பெண்ணை காதலித்து 3 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.இவர் தினமும் குடித்துவிட்டு பிரச்சனை செய்வதால் மனைவி இவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.

பின்னர் முரளி தாய் கொண்டம்மாள்(52) மற்றும் இவரது அண்ணன் கிரிபாபு(26) ஆகியோருடன் ஒன்றாக வசித்து வந்துள்ளார்.மேலும் மனைவியை பல முறை அழைத்தும் வீட்டிற்கு வரவில்லை என்ற மன உளைச்சலில் முரளி தினமும் குடித்துவிட்டு பிரச்சனை செய்து வந்துள்ளார்.இந்த நிலையில் நேற்று காலை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் தாய் மற்றும் அண்ணன் கிரிபாபு ஆகியோர் புகார் ஒன்றை அளித்தனர். அதில் முரளி அதிக குடிப்போதையில் இருந்ததால் சுவர் மீது மோதி இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

பின்னர் சந்தேகமடைந்த போலீசார் இருவரிடமும் நடத்திய விசாரணையில் முரளி நேற்று இரவு குடிப்பதற்காக தாய் கொண்டம்மாள் மற்றும் அண்ணணிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தும்,அசிங்கமாக திட்டி வந்துள்ளார். இதனால் கோபமடைந்த தாய் மற்றும் அண்ணன் முரளி கொலை செய்ய சதி திட்டம் தீட்டி அன்று இரவே உருட்டு கட்டையால் முரளி தலையில் அடித்து கொலை செய்துவிட்டனர்.பின்னர் காலையில் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக கொண்டம்மாள் மற்றும் கிரிபாபு ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.மேலும் இவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.