ETV Bharat / jagte-raho

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கிடையே இளைஞர் அடித்துக் கொலை - போலீசார் குவிப்பு

author img

By

Published : Jan 1, 2020, 6:40 PM IST

தேனி: பெரியகுளம் அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட மோதலில் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Theni Murder
Theni Murder

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலம் பகுதியில் 10க்கும் மேற்பட்டோர் நேற்றிரவு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜெயமங்கலத்தைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் பெரியகுளம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

மேல்மங்கலம் கிராமத்தைக் கடக்கும்போது புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களுக்கும் இவர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், இளைஞர் கார்த்திக் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், அதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரிகிறது.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த காவல் துறையினர், இளைஞரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் மோதலில் ஈடுபட்டவர்கள் இருவேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அப்பகுதியில் கலவரம் ஏற்படும் சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக ஜெயமங்கலம் மற்றும் மேல்மங்கலம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

பெரியகுளம் அருகே இளைஞர் அடித்துக் கொலை

இதற்கிடையே இறந்த கார்த்திக்கின் உறவினர்கள் கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக் கோரி உடலை வாங்க மறுத்து பெரியகுளம் அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து தேனி மாவட்ட காவல் துறை கண்காணிபாளர் சாய் சரன் தேஜஸ்வி சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டார். தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால், உயிரிழந்த இளைஞரின் உறவினர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க...

தோழிகளுடன் ஏரியில் குளிக்கச் சென்ற மாணவி நீரில் மூழ்கி உயிரிழப்பு

Intro: பெரியகுளம் அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் வாலிபர் பலி. பதட்டம் நிலவுவதால் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிப்பு.
Body: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலம் பகுதியில் 10க்கும் மேற்பட்டோர் நேற்றிரவு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர், அப்போது ஜெயமங்கலத்தை சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் பெரியகுளம் நோக்கி சென்று கொண்டிருந்தார். மேல்மங்கலம் கிராமத்தை கடக்கும் போது புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு மோதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த மோதலின் போது ஜெயமங்கலத்தை சேர்ந்த இளைஞர் கார்த்திக் தாக்கப்பட்டு பலியானதாகவும் கூறப்படுகின்றது.
இதனை அடுத்து காவல்துறையினர் பலியான இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகாக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டு மோதல் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் மோதலில் ஈடுபட்டவர்கள் இருவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அப்பகுதியில் கலவரம் ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது. இதன் காரணமாக ஜெயமங்கலம் மற்றும் மேல்மங்கலம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே இறந்த கார்த்திக்கின் உறவினர்கள் கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரி உடலை வாங்க மறுத்து பெரியகுளம் அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Conclusion: இதனால் தேனி மாவட்ட காவல்துறை கண்காணிபாளர் சாய் சரன் தேஜஸ்வி சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டார். தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.