ETV Bharat / jagte-raho

டிராக்டர் மேலேறியதால் பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்!

தென்காசி: இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் குறுக்கே வந்த மிதிவண்டியில் மோதி கீழே விழுந்துள்ளனர். அவர்கள் மீது எதிரே வந்த டிராக்டர் ஏறியதில் அதில் ஒரு இளைஞர் உயிரிழந்தார்.

பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்
பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்
author img

By

Published : Oct 23, 2020, 12:12 AM IST

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வி.கே. புதூர் தாலுகா ஏந்தலுரை சேர்ந்த தங்கப்பாண்டியன் மகன் ஜெகதீஸ். அதே பகுதியைச் சேர்ந்த முருகையா பாண்டியன் மகன் பாலசுப்பிரமணியன் ஆகிய (23) இருவரும் இருசக்கர வாகனத்தில் ராஜபாளையம் சாலையில் உள்ள பள்ளியில் நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமிற்கு சென்றுகொண்டிருந்த நிலையில் குறுக்கே வந்த சைக்கிளில் மோதி இருவரும் கீழே விழுந்தனர்.

அப்போது புளியம்பட்டியை சேர்ந்த ஆனந்தபிரகாஷ் ஒட்டி வந்த டிராக்டர் ஜெகதீஸ், பாலசுப்பிரமணியன் ஆகியோர் மீது ஏறியது. அதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். விபத்துக்குள்ளான பகுதி அருகே சங்கரன்கோவில் நகர் காவல் நிலையம் உள்ளதால் இதை அறிந்த நகர காவல் நிலைய ஆய்வாளர் மங்கையர்கரசி உள்ளிட்ட காவல் துறையினர் 108 ஆம்புலன்ஸை எதிர்பார்க்காமல் காவல் துறை வாகனத்தில் படுகாயம் அடைந்த ஜெகதீஸை ஏற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்

அங்கு படுகாயம் அடைந்த ஜெகதீஸுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க: வீட்டு உரிமையாளருக்கு கொலை மிரட்டல்: விஜயலட்சுமி மீது காவல் நிலையத்தில் புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.