ETV Bharat / jagte-raho

கத்திமுனையில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! - பெண் பாலியல் வன்கொடுமை

சென்னை: வீடு வீடாக மிக்ஸி விற்க வந்த இளைஞர் வீட்டில் தனியாக இருந்த இளம் பெண்ணை கத்திமுனையில் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

rape
rape
author img

By

Published : Dec 18, 2020, 11:13 AM IST

குஜராத் மாநிலத்தை பூர்விகமாகக் கொண்டவர், ஏழு கிணறு பகுதியில் மின்விளக்கு விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில் தனது 20 வயது மனைவியுடன் வியாசர்பாடியில் வசித்து வருகிறார்.

நேற்று அவர் வழக்கம் போல் கடைக்கு சென்ற நிலையில், அவரது மனைவி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீடு வீடாக சென்று மிக்ஸி விற்பனை செய்யும் வடமாநில இளைஞர் ஒருவர், இளம்பெண் மட்டும் வீட்டில் தனியாக இருப்பதையறிந்து திடீரென்று வீட்டிற்குள் புகுந்துள்ளார்.

பின்னர் அப்பெண்ணை கத்தி முனையில் மிரட்டி, பாலியல் வன்புணர்வு செய்த அந்த இளைஞர், நாளைக்கு மீண்டும் வருவேன் என்றும் கூறிவிட்டு சென்றுள்ளார். இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்த அப்பெண்ணின் கணவர், மனைவியின் நிலையை பார்த்து அதிர்ந்துள்ளார்.

இந்நிலையில், கூறியபடியே மறுநாளும் மிக்சியுடன் வீட்டிற்குள் நுழைந்த அந்த இளைஞரை, அங்கு மறைந்திருந்த இளம்பெண்ணின் கணவர் மற்றும் அவரது நண்பர்கள் பிடித்து அடித்து உதைத்து காவல்துறையில் ஓப்படைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவலர்கள், இளைஞரிடம் நடத்திய விசாரணையில், அவர் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த முகமது ஆரிப் (20) என்பதும், நண்பர்களுடன் கிண்டியில் தங்கியிருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து முகமது ஆரிப்பை கைது செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மீது மாடல் அழகி பாலியல் புகார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.