உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் பேருந்தில் பெண் செய்தியாளருக்கு டெல்லி போக்குவரத்து ஊழியர் நேற்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண் பேருந்தில் சத்தமிட்டதும், குற்றவாளி ஓடும் பேருந்திலிருந்து இறங்கி தப்பித்துச் சென்றுவிட்டார். இதுபற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை குற்றவாளி கைதுசெய்யப்படவில்லை.
ஓடும் பேருந்தில் பாலியல் தொல்லைக்கு ஆளான பெண் செய்தியாளர் தனக்கு நேர்ந்த அசம்பாவித சம்பவம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், பெண்கள் பாதுகாப்புக்கு அமர்த்தப்பட்டிருந்த காவலர் முன்னிலையிலேயே இச்சம்பவம் நடந்தது. பேருந்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என கவலை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இந்து மகா சபா மாநிலத் தலைவர் மீது பாலியல் புகார்