வடக்கு தாமரைக்குளம் ஆசாரிமார் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன் (48). இவர் நாகர்கோவிலில் உள்ள லேத் பட்டறை ஒன்றில் வெல்டிங் தொழிலாளராக பணியாற்றி வந்தார். கவிதா (45) என்ற மனைவியும் இரண்டு மகன்களும் இவருக்கு உள்ளனர்.
நாகராஜனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால், கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்படுமென கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு அதேபோன்ற ஒரு தகராறையடுத்து, மகன்களோடு கவிதா தன் தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். நாகராஜன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று மாலை கடிதம் எழுதி வைத்து விட்டு, நாகராஜன் தன் வீட்டினுள் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தென்தாமரைக்குளம் காவல்துறையினர் விரைந்து சென்று வீட்டின் கதவை உடைத்து நாகராஜனின் உடலை கைப்பற்றினர்.
![தற்கொலை எதற்கும் தீர்வல்ல...](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9964281_suicide-sneha-toll-image.jpg)
அப்போது நாகராஜன் எழுதி வைத்திருந்த கடிதத்தில், தன் சாவுக்கு என் மனைவி, மாமியார், மற்றும் மனைவியின் உறவினர்கள்தான் காரணம் என்று எழுதி வைத்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்நிகழ்வு குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், நாகராஜனின் மனைவி மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 29 ஆண்டுகால கேரள கன்னியாஸ்திரி மரண வழக்கு ஓர் பார்வை...