ETV Bharat / jagte-raho

பார் கவுன்சிலில் பதிய கையூட்டுப் பெற்ற வழக்குரைஞர்களுக்கு வலைவீச்சு!

சென்னை: பார் கவுன்சிலில் போலியாகப் பெயரைப் பதிவு செய்ய 25ஆயிரம் ரூபாய் கையூட்டுப் பெற்ற இரண்டு வழக்குரைஞர்களைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

Web bribes for registered bribery lawyers at Bar Council
author img

By

Published : Nov 7, 2019, 1:26 PM IST

சென்னை பார் கவுன்சில் ஆஃப் தமிழ்நாட்டில் செயலாளராக இருப்பவர் ராஜா குமார். இவர் சென்னை உயர் நீதிமன்றம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். இதில் “வில்லிவாக்கம் ராஜாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் விப்பீன் (59). இவர் ரயில்வே துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.

விப்பீன் பணியிலிருக்கும்போதே சட்டப்படிப்பு படித்துள்ளார். அதனால் கடந்த ஜனவரி மாதம் பார் கவுன்சிலை அணுகி தனது பெயரைப் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் பணியில் இருக்கும்போது பெயரைச் சேர்க்க முடியாது என கவுன்சில் நிராகரித்துள்ளது.

இது தொடர்பாக வழக்குரைஞர் உலகநாதன், மோகன்தாஸ் ஆகியோர் ரூபாய் 40 ஆயிரம் கையூட்டாகத் தந்தால், பெயரை கவுன்சிலில் சேர்ப்பதாக விப்பீனிடம் தெரிவித்துள்ளனர். இதனை நம்பி முன்பணமாக 25 ஆயிரம் ரூபாய் விப்பீன் அளித்ததாகவும் கூறினார். பின்னர் நீண்ட நாட்களாகியும் தனது பெயரைச் சேர்க்காததால் பார் கவுன்சில் அலுவலகத்தில் முறையிட வந்தார். இதனால் சம்பந்தப்பட்ட இரண்டு வழக்குரைஞர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து இது குறித்து கையூட்டு கொடுத்த விப்பீனை கைது செய்த உயர் நீதிமன்ற காவல் துறையினர், தலைமறைவான இரண்டு வழக்குரைஞர்களைத் தேடிவருகின்றனர்.

Intro:Body:பார் கவுன்சிலில் போலியாக பெயரை பதிவு செய்ய 25ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய 2 வழக்கறிஞர்கள் தலைமறைவு.லஞ்சம் கொடுத்த நபரிடம் போலிசார் விசாரணை.

சென்னை பார்கவுன்சில் ஆப் தமிழ்நாட்டில் செயலாளராக இருப்பவர் ராஜா குமார்.இவர் சென்னை உயர்நீதிமன்றம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். இதில் வில்லிவாக்கம் ராஜாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் விப்பீன் (59).இவர் ரயில்வே துறையில் பணியாற்றி விருப்ப பணி முறையில் ஓய்வு பெற்றுள்ளார்.இவர் பணியில் இருக்கும் போதே சட்டப்படிப்பு படித்துள்ளார்.இந்நிலையில் இவர் கடந்த ஜனவரி மாதம் பார் கவுன்சிலில் அனுகி தனது பெயரை பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டதாகவும் ஆனால் பணியில் இருக்கும்போது படித்ததை ஏற்றுகொள்ள முடியாது எனவும்,பெயரை சேர்க்க முடியாது என கவுன்சில் நிராகரித்து உள்ளது. இது தொடர்பாக வழக்கறிஞர் உலகநாதன் மற்றும் மோகன்தாஸ் ஆகியோர் ரூபாய் 40 ஆயிரம் லஞ்சமாக தந்தால் உனது பெயரை கவுன்சிலில் சேர்ப்பதாக விப்பினிடம் தெரிவித்து உள்ளனர். இதனை நம்பி முன்பணமாக 25ஆயிரம் ரூபாய் விப்பின் அளித்ததாகவும் கூறினார். பின்னர் நீண்ட நாட்களாகியும் தனது பெயரை சேர்க்காததால் பார் கவுன்சில் அலுவலகத்தில் முறையிட வந்துள்ளார். அப்போது இதனை விசாரித்த பார் கவுன்சில் செயலாளர் ராஜாகுமார் முறைக்கேடாக பெயரை பதிவு செய்ய முயன்றதாகவும்,பணத்தை லஞ்சமாக பெற்ற 2 வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நீதிமன்றம் காவல் நிலையத்தில் புகார் மனுவை அளித்தார். இது தொடர்பாக விபின் என்ற நபரை போலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் ஏமாற்றிய இரண்டு வழக்கறிஞர்கலையும் போலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்..Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.