வடோதரா (குஜராத்): போலி சான்றிதழ்கள் தயாரித்து விநியோகம் செய்துவந்த கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
குஜராத்தின் வடோதரா பகுதியில் பல்வேறு பல்கலைக்கழகங்களின் போலியான மதிப்பெண் சான்றிதழ்களையும், பட்டங்களையும் கும்பல் ஒன்று தயாரித்து வழங்கி வந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர், குற்றச்சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்துள்ளனர்.
வடோதரா கோர விபத்து: குழந்தை உள்பட 11 பேர் உயிரிழப்பு!
அவர்களிடம் விசாரணை நடத்தியதில், 7 ஆண்டுகளாக இந்த மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. அந்தக் கும்பலிடமிருந்து, போலி மதிப்பெண் சான்றிதழ்கள் தயாரிக்க உதவிய 3 கணினிகள், மின்னணுப் பொருள்கள் போன்றவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
போலியான சான்றிதழ்களையும் கைப்பற்றியுள்ளனர். இதனை தொடர்ந்து, அந்தப் பல்கலை கழகங்களில் பணிபுரிபவர்கள் யாரேனும் இந்தக் கும்பலுடன் தொடர்பில் உள்ளனரா என்பது குறித்தும் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.