ETV Bharat / jagte-raho

ஓய்வுபெற்ற ராணுவ அலுவலர் மீது துப்பாக்கிச் சூடு - உத்தரப் பிரதேசம் செய்திகள்

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் கிராமத் தலைவரின் கணவர் அவரது ஆள்களுடன் இணைந்து ஓய்வுபெற்ற ராணுவ அலுவலரைத் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கிச் சூடு
துப்பாக்கிச் சூடு
author img

By

Published : Jun 4, 2020, 6:05 PM IST

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டம் ஹசன்பூரைச் சேர்ந்த கிராமத் தலைவரின் கணவர் சந்தீப், அவரது ஆள்களுடன் இணைந்து அதே கிராமத்தில் வசித்துவரும் ஓய்வுபெற்ற ராணுவ அலுவலர் யஷ்வீர் சிங்கின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தனர்.

இதையடுத்து, அவர்கள் யஷ்வீர் சிங்கைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அவ்விடத்திலிருந்து சென்றனர்.

படுகாயமடைந்த யஷ்வீர் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

இந்நிலையில், பழைய பகையை மனத்தில் வைத்துக்கொண்டு, கிராமத் தலைவரின் கணவர் சந்தீப்பும் அவரது ஆள்களும் நேற்று மாலை, ஹசன்பூர் கிராமத்தில் உள்ள தங்கள் வீட்டிற்குள் நுழைந்து, யஷ்வீர் சிங்கை சுட்டதாக அவரது சகோதரர் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருவதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : டெல்லியில் பாஜக பிரமுகர் சுட்டுக்கொலை; காவல் துறையினர் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.