ஈரோடு மாவட்டம் கணக்கம்பாளையம் சின்னகாளியூரைச் சேர்ந்த ரஞ்சித் என்ற தங்கராஜ் (30). மெக்கானிக் கடை நடத்திவந்தார். அதேப் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (35) ஒப்பந்த மின்வேலை செய்துவருபவர். இவர்கள் இருவரும் பவானி - சத்தியமங்கலம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது கள்ளிப்பட்டி திரையரங்கு அருகே நிலைதடுமாறி சாலையோர மின்கம்பத்தில் மோதினர்.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு அப்பகுதியினர் கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் இருவரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இது குறித்து பங்களாபுதூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இருவருக்குமே திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்க:
இருசக்கர வாகனத்தில் சென்ற சகோதரர்களின் மீது இடி தாக்கியதில் ஒருவர் பலி!
இருசக்கர வாகனமும் வேனும் நேருக்கு நேர் மோதல்: பள்ளி மாணவன் பலி!