ETV Bharat / jagte-raho

நிலமோசடி வழக்கு; திமுக பிரமுகர் உள்பட இருவர் கைது! - சென்னை மாவட்டம்

சென்னையில் வேறொருவர் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.80 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்த வழக்கில் திமுக இளைஞரணி செயலாளர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திமுக பிரமுகர் உள்பட இருவர் கைது
திமுக பிரமுகர் உள்பட இருவர் கைது
author img

By

Published : Oct 8, 2020, 1:27 AM IST

சென்னை: ரூ.80 லட்சம் மதிப்புள்ள இடத்தை போலி ஆவணம் மூலம் ஆள்மாறாட்டம் செய்து அபகரித்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிவக்குமார் என்பவர் மடிப்பாக்கம் ராம் நகர் 27ஆவது பிரதான சாலையில் 4,800 சதுர அடி கொண்ட இடத்தை கடந்த 1983 ஆம் ஆண்டு ராம் நிக்கால் பயாணி, ஸ்ரீ சாந்திலால் பயாணி, ஸ்ரீ பிரதீப்குமார் பயாணி ஆகியோர்களிடமிருந்து வாங்கி சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா பெற்று வைத்திருந்துள்ளார்.

இந்நிலையில் சிவகுமார் அந்த இடத்தை கடந்த 2019 ஆம் ஆண்டு சென்று பார்த்தபோது அவரின் இடத்தில் வேறு ஒருவர் பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக அவர் சார்பதிவாளர் அலுவலகத்தில் சென்று பார்த்தபோது சிவகுமார் பெயரில் வேறொரு நபர் ஆள்மாறாட்டம் செய்து போலியான ஆதார் கார்டு, போலியான பட்டா பெற்று சரவணகுமார் ஆதிலிங்கம் என்ற பெயரில் வேளச்சேரி சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது .

போலி ஆவணங்கள் மூலம் சரவணக்குமார் ஆதிலிங்கம் அந்த இடத்தை வெங்கடேஸ்வர பிரசாத் என்பவருக்கு ரூ.80 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து சிவகுமார் இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அவர்களிடம் புகார் அளித்திருந்தார். பின்னர் காவல் ஆணையர் உத்தரவின் பெயரில் மத்திய குற்றப்பிரிவு நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் சிவகுமார் என்பவரை போல் சரவணக்குமார் ஆதிலிங்கம் ஆள்மாறாட்டம் செய்து நிலத்தை அபகரித்து தெரியவந்தது.

இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல்துறையினர் மறைமலைநகரை சேர்ந்த சரவணக்குமார் ஆதிலிங்கம்(32) என்பவரையும் நிலத்தை அபகரிக்க உடந்தையாக போலி ஆவணங்களை தயார் செய்து கொடுத்த சென்னையை சேர்ந்த பிரித்திவிராஜ்(28) ஆகிய இருவரையும் கைது செய்து நீதிபதி முன் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதில் பிரித்திவி ராஜ் சோழிங்கநல்லூர் திமுக இளைஞரணி செயலாளராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அங்கோடா லொக்கா வழக்கில் கைதான மூன்று பேருக்கு பிணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.