மண்ணடியைச் சேர்ந்தவர் ரஃபியுதின் (24). இவர் பர்மா பஜாரில் கலந்தர் என்பவரிடம் பணிபுரிந்துவருகிறார். இவர் வெளிநாட்டுப் பணங்களை மாற்றித் தரும் பணியைச் செய்துவருகிறார்.
நேற்று இரவு ரஃபியுதின் தனது இருசக்கர வாகனத்தில் எட்டு லட்சம் மதிப்புள்ள அமெரிக்கா டாலர் தாள்களை எடுத்துக்கொண்டு திருவல்லிக்கேணி நோக்கிச் சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் பணத்தைக் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.
அப்போது, 'காப்பாத்துங்க... காப்பாத்துங்க...' எனக் குரல் எழுப்பிய ரஃபியுதினின் சத்தத்தை கேட்டு, அப்பகுதியில் சென்றுகொண்டிருந்த பொதுமக்கள் ஒன்றுகூடி மன்றோ சிலை அருகே கொள்ளையர்களை மடக்கிப் பிடித்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர்கள் இருவரும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் (21), பாஸ்கரன் (37) எனத் தெரியவந்தது.
இதையும் படிங்க: விமானத்தில் கேட்பாரற்று கிடந்த 1.5 கிலோ தங்கம்!