ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்டலம் பகுதியில், கன்டெய்னர் லாரிகள் நிறுத்தும் பார்க்கிங் யார்ட் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் கன்டெய்னர் பார்க்கிங் யார்டில் சோதனை செய்ததில் அங்கு வாகனங்களை நிறுத்தும் வட மாநில ஓட்டுநர்களுக்கு கஞ்சா விற்று வந்த 2 இளைஞர்கள் கையும் களவுமாக பிடிபட்டனர்.
அவர்கள் சென்னையை சேர்ந்த மணிகண்டன் (24) மற்றும் செய்யாறு பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (19) என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சா மற்றும் 2 வீச்சரிவாள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பட்டப்பகலில் பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி: பைக்கில் வந்த ஆசாமிகளைத் தேடும் காவல் துறை!