துாத்துக்குடி மீளவிட்டான் பகுதியில் ரயிலில் அடிபட்டு ஒருவர் இறந்துகிடப்பதாக ரயில்வே காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற காவல் துறையினர், இறந்தவர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதையடுத்து காவல் துறையினர் விசாரணை செய்ததில், இறந்தவர் மால்கம் பெர்ணான்டோ (50)என்பதும், துாத்துக்குடி தருவைப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.
மேலும், இவர் மணியாச்சி காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர் எனவும், தற்போது சிறப்பு காவல் குழுவில் பணியாற்றி வந்தார் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிந்தது.
மேலும், அவர் எதற்காகத் தற்கொலை செய்து கொண்டார்? குடும்பத் தகராறு காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என விசாரித்துவருகின்றனர். .
தற்கொலை செய்துகொண்ட மால்கம் பெர்னாண்டோவுக்கு மேகலா என்ற மனைவியும், ஒரு மகள், மகன் உள்ளனர். மேகலா, தூத்துக்குடி பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.