ETV Bharat / jagte-raho

போலீசிடமே ஆட்டயபோட்ட 'ஜெகஜால கில்லாடி' திருடன்! - சென்னை

சென்னை: வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியம் பெண் காவலரின் வங்கி கணக்கில் இருந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நூதன முறையில் 10 ஆயிரம் ரூபாயை திருடியுள்ளார்.

பெண் காவலரிடம் நூதன முறையில் பணம் திருடிய மர்ம நபர்கள்
author img

By

Published : Apr 7, 2019, 3:13 PM IST

சென்னை வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருபவர் முத்து கிருஷ்ணவேணி. இவர் கடந்த ஒன்றாம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது இவரது செல்போனுக்கு அழைப்பு வந்தது. அதனை இவரது கணவர் ராதாகிருஷ்ணன் எடுத்துப் பேசியுள்ளார். அப்போது எதிர் முனையில் பேசிய அடையாளம் தெரியாத நபர் கிருஷ்ணவேணி கணக்கு வைத்துள்ள பாரத ஸ்டேட் வங்கியிலிருந்து (SBI) பேசுவதாக கூறி வங்கி கணக்கு விவரங்களை கேட்டுள்ளார்.

இதனை நம்பி ராதாகிருஷ்ணன் வங்கி கணக்கு எண் மற்றும் ஒருமுறை கடவுச்சொல் (OTP) ஆகியவற்றை கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து 9,998 ரூபாயை அடையாளம் தெரியாத நபர் எடுத்துள்ளார். இது குறித்து வில்லிவாக்கம் காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.

பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று காவல் துறையினர் பல்வேறு கருத்துகள் தெரிவித்துவரும் நிலையில் காவல் துறையினரின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Intro:பெண் காவலர் கணவரிடம் வங்கியிலிருந்து பேசுவது போல குறி கணக்கில் ரூ.10 ஆயிரம் ரூபாய் திருடிய மர்ம கும்பல் மீது புகார்.

Body:சென்னை வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் முத்து கிருஷ்ணவேணி. இவர் கடந்த ஒன்றாம் தேதி வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது.அதனை பெண் காவலரின் கணவர் ராதாகிருஷ்ணன் எடுத்து பேசியுள்ளார். அப்போது எதிர் முனையில் பேசிய மர்ம நபர் பெண் காவலர் கணக்கு வைத்துள்ள sbi வங்கியிலிருந்து பேசுவதாக கூறி வங்கி கணக்கு விவரங்களை கேட்டுள்ளார். இதனை நம்பிய ராதாகிருஷ்ணன் வங்கி கணக்கு எண் மற்றும் OTP ஆகியவற்றை கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில்8 அவரது வங்கி கணக்கில் 9,998 ரூபாய் மர்ம நபர்கள் எடுத்துள்ளனர்.இது குறித்து வில்லிவாக்கம் போலீசார் புகார் அளித்ததையடுத்து வில்லிவாக்கம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று போலீசார் பல்வேறு பிரச்சாரங்கள் செய்து வரும் நிலையில் போலீசாரின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப் பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Conclusion:பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று போலீசார் பல்வேறு பிரச்சாரங்கள் செய்து வரும் நிலையில் போலீசாரின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப் பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.