தூத்துக்குடி : டிக்டாக் பிரலமான ஜி.பி.முத்து தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசு தடைசெய்த பிரபல வீடியோ பகிர்வு பொழுதுபோக்கு செயலியான டிக்டாக் மூலம் பிரபலமடைந்தவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துவின் காணொலிகளுக்கு பெரும் ரசிகர் பட்டாளமே உண்டு.
பாண்டிகோயிலில் நிகழ்ந்த கொடூர கொலை! குற்றவாளிகளை தேடுகிறது போலீஸ்!
முன்னதாக, தன் காணொலிகளால் குறிப்பிட்ட சமூகத்தை கிண்டல் செய்ததற்காக காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் அவர் விடுக்கப்பட்டார். மேலும், டிக்டாக் தடையால் மனவருத்தமடைந்த முத்து, டிக்டாக் செயலிக்கான தடையை விலக்க வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கும் காணொலி மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இருப்பினும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவர் தொடர்ந்து காணொலிகளை வெளியிட்டு வந்தார். சமீபத்தில், குடும்பப் பிரச்னை காரணமாக சமூக வலைதளங்களில் காணொலிப் பதிவேற்றம் செய்ய முடியவில்லை என வருத்தத்துடன் பதிவிட்டிருந்தார். அதன்பின், சமூக வலைதளங்களின் பக்கம் வராமல் ஒதுங்கியிருந்தார் முத்து.
இச்சூழலில், இன்று திடீரென அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஜி.பி.முத்து அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் தற்கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்னை காரணமாக, அவர் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்துள்ளது.