திருப்பத்தூர் மாவட்டம், ஹயாத் நகர் பகுதியை சேர்ந்த உதயசூரியன் (55) என்பவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி லதா, அவரது மகன் கோபிநாத் ஆகிய இருவரும் வீட்டிலிருந்து வெளியே சென்று உள்ளனர்.
இதனை நோட்டமிட்ட டிப்டாப் திருடன் வீட்டில் நுழைந்து இரண்டாவது தளத்தில் உள்ள ஒரு அறையை உடைத்து உள்ளே தேடி உள்ளான். அங்கு எதுவும் இல்லாததால் அவசர அவசரமாக கீழே இறங்கி முன்பக்க கதவை உடைத்து முதல் அறை பீரோவில் இருந்த ஒரு லட்சம் ரூபாயும் அடுத்த அறையில் இருந்த ரூ .50 ஆயிரம் பணத்தையும் கொள்ளை அடித்துக்கொண்டு இருந்துள்ளான்.
அப்போது கோபி, லதா ஆகியோர் வீட்டிற்கு வந்துள்ளனர். இருவரையும் கண்ட திருடன் வீட்டில் இருந்து வெளியே வந்த படி அவசர அவசரமாக ஓடி உள்ளான்.
அப்போது அவரது மகன் கோபி அம்மா திருடன் பிடிங்க என்று கூறியுள்ளான். இந்நிலையில், அந்தத் திருடன் உள்ளே ஒருவன் உள்ளான் அவனைப் பிடியுங்கள் என்று லதாவை தள்ளி விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளான்.
இந்தச் சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வரதட்சணை கேட்டு கொலை செய்த கணவனுக்கு 19 ஆண்டு சிறை