ETV Bharat / jagte-raho

மதுபான கடையில் பூட்டை உடைத்து திருடிய இளைஞர் கைது! - விருதுநகர் திருட்டு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மதுபானக் கடையின் பூட்டை உடைத்து 60 ஆயிரம் மதிப்பிலான 350 மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இவ்வழக்கில் மேலப்பாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

thief arrested in virudhunagar
thief arrested in virudhunagar
author img

By

Published : Aug 30, 2020, 3:58 PM IST

விருதுநகர்: இலந்தைகுளம் மதுபான கடையில் நடந்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இலந்தைகுளம் பகுதியில் ஆகஸ்ட் 2ஆம் தேதி ஊரடங்கை சாதகமாகப் பயன்படுத்தி அடையாளம் தெரியாத ஒருவர் மதுபான கடையின் பூட்டை உடைத்து 60 ஆயிரம் மதிப்பிலான 350க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை திருடிச் சென்றார்.

இதுகுறித்து நத்தம்பட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இத்தருணத்தில், வத்திராயிருப்பு அருகே மேலப்பாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் (21) என்ற இளைஞர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். காவல் துறையினர் இவருடன் தொடர்பில் இருந்த நபர்களை குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.