திருப்பூரில் 108 அவசர அழைப்புக்கு நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் அழைத்த நபர், ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து நள்ளிரவில் மாநகர் காவல் துறையினர், மோப்பநாய், வெடிகுண்டு கண்டறியும் கருவிகளுடன் 50-க்கும் மேற்பட்டோர் சோதனை மேற்கொண்டனர். இரண்டு மணி நேர சோதனைக்குப் பிறகு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.
இதனையடுத்து மிரட்டல்விடுத்த நபரின் மொபைல் எண்ணை டிரேஸ் செய்து விசாரித்ததில், மிரட்டல்விடுத்தது தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பதும், மது போதையில் மிரட்டல்விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க...தரமணியில் தாய், மகள் சடலம் மீட்பு: கொலையா, தற்கொலையா?