ETV Bharat / jagte-raho

மார்த்தாண்டத்தில் தொடர் கொள்ளை; அச்சத்தில் கிராம மக்கள்! - 44 சவரன் தங்க நகைகள்

கன்னியாகுமரி: மார்த்தாண்டம் பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொள்ளை சம்பவங்களால், கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களிடைய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

cctv-footage
author img

By

Published : Jul 2, 2019, 5:19 PM IST

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே பம்மம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு வெளியூர் சென்றிருந்தபோது வீட்டின் பூட்டை உடைத்து 44 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவரும் நிலையில் இன்று அதிகாலை பயணம் எனும் பகுதியில் என்ஆர்எஸ்ஏ என்ற பெயரில் செயல்பட்டு வரும் பலசரக்குக் கடையின் பூட்டை உடைத்து ரூ.20 ஆயிரத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இது குறித்து கடை உரிமையாளர் நேசையன், மார்த்தாண்டம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காவலர்கள், கண்காணிப்பு கேமரா பதிவுகளை சோதனை செய்தனர். அப்போது, தலையில் துண்டு அணிந்து கையில் கம்பியுடன் வரும் ஒரு நபர் கண்காணிப்பு கேமராக்களின் திசையை அவர் வைத்திருந்த கம்பியால் மாற்றி விட்டு முகத்தை மூடி உள்ளே சென்று கல்லாவில் இருக்கும் ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பித்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

திருடன் பணத்தை கொள்ளை அடிக்கும் காட்சி

இதைத் தொடர்ந்து அந்தக் காட்சிகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அடுத்தடுத்து அரங்கேறும் கொள்ளை சம்பவங்களால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே தொடரும் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். பயணம் பகுதியில் பலசரக்குக் கடையின் கதவின் பூட்டை உடைத்து 20 ஆயிரம் ரொக்கம் கொள்ளை. கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை.

Body:கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு பம்மம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் ஆசாரி வெளியூர் சென்றிருந்த நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து 44 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை பயணம் பகுதியில் உள்ள என் ஆர் எஸ் ஏ என்ற பெயரில் செயல்படும் பலசரக்குக் கடையின் பூட்டை உடைத்து 20000 ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இன்று காலை கடையை திறக்க சென்ற கடையின் உரிமையாளர் நேசையன் ஷட்டர் திறக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து மார்த்தாண்டம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை சோதனை செய்தனர். அப்போது, தலையில் துண்டு அணிந்து கையில் கம்பியுடன் வரும் ஒருவர் கண்காணிப்பு கேமராக்களை கம்பால் திசையை மாற்றி விட்டு முகத்தை மூடி உள்ளே சென்று கல்லாவில் இருக்கும் 20000 ரூபாய் கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதை தொடர்ந்து அந்த காட்சிகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.