மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் சக்தி என்ற சிவராஜ்(48). இவருடைய மனைவி அமுதா என்ற கேத்தீஸ்வரி(43) இவர்களுக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர். சிவராஜ் சொந்தமாக லாரி வைத்துள்ளார். சிவராஜ் மற்றும் அமுதா இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தூங்கிக் கொண்டிருந்த சிவராஜின் தலையில் அவரது மனைவி கிரைண்டர் கல்லை போட்டு கொலை செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அமுதாவை ஆஸ்டின்பட்டி காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், வேலைக்காக அடிக்கடி வெளியூர் சென்று வரும் சிவராஜ்க்கும் சென்னையில் உள்ள ஒரு பெண்ணிற்கும் நீண்ட காலமாக தொடர்பு இருந்துவந்துள்ளது.
இதனால் தங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறிய அவர், சென்னையில் உள்ள அப்பெண்ணை தனது வீட்டற்கு அழைத்துவர உள்ளதாக சிவராஜ் தன்னிடமே தெரிவித்தால் தங்களுக்குள் தகராறு முற்றியது, இதனால் நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த சிவராஜின் தலையில்போது கிரைண்டர் கல்லை போட்டு கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.