கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த அசகளத்தூரில் சகோதரிகளான சுஜாதா, சுமதி ஆகிய இருவரும் தாய் வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 5 நாள்களுக்கு முன்பு இருவருக்கும் வாய்த்தகராறில் ஏற்பட்ட பிரச்னை கைகலப்பாக மாறியுள்ளது. இதில், சுஜாதா தனது அக்காவான சுமதியை அரிவாளால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சுமதி, அவரது குழந்தை ஸ்ரீ நிதி இவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மகள் உயிரிழந்த நிலையில், சுமதியின் தந்தை வரஞ்சரம் காவல் நிலையத்தில், தனது மகளுக்கு பேய் பிடித்ததால் தன்னை தானே வெட்டிக்கொண்டு தீக்குளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மனைவி மற்றும் குழந்தையை இழந்த சுமதியின் கணவர், மரணத்திற்கு நியாயம் கேட்டு இருவரது உடல்களையும் சாலையில் வைத்து உறவினர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வரஞ்சரம் காவல் துறையினர் சுமூக பேச்சுவார்த்தை நடத்தி விசாரணைக்கு பின் தெரியவரும் என தெரிவித்து சமாதானப்படுத்தினர்.
இதையும் படிங்க: மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை இன்று ஆரம்பம்!