ETV Bharat / jagte-raho

கோயில் பணத்தில் கையாடல் - கணக்காளர் கைது!

சென்னை: கோயில் ஊழியர்களின் சம்பள பணம் 3 லட்சம் ரூபாயை கையாடல் செய்த கணக்காளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

arrest
arrest
author img

By

Published : Jan 7, 2020, 6:25 PM IST

சௌகார்பேட்டை பள்ளியப்பன் தெருவில், இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான அருணாசலேஸ்வரர், வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் கடந்த 2016 முதல் 2018ஆம் ஆண்டு வரை, பொன்னேரி பகுதியைச் சேர்ந்த பிரபாகர் (44) என்பவர் கணக்காளராக இருந்துள்ளார்.

அப்போது, அந்தக் கோயிலில் 15 ஊழியர்கள் பணிபுரிந்து வந்துள்ளனர். அவ்வூழியர்களுக்கு பண்டிகைக் காலங்களில் சிறப்புத் தொகையாக ஒதுக்கப்படும் சம்பளப் பணத்தைத் தராமல், சுமார் 3 லட்சத்து 34 ஆயிரம் ரூபாயை பிரபாகர் கையாடல் செய்துள்ளார். இந்த மோசடியைக் கண்டறிந்த தற்போதைய செயல் அலுவலரான ராதாமணி, இதுதொடர்பாக யானைகவுனி காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

அப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த யானைகவுனி காவல்துறையினர், பிரபாகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: தொழிலதிபரிடம் 1 கோடியே 21 லட்சம் ரூபாய் மோசடி - இருவர் கைது!

Intro:Body:கோவிலில் ஊழியர்களின் சம்பள பணம் 3 லட்சம் ரூபாயை கையாடல் செய்த கணக்காளர் கைது.

சென்னை சௌகார்பேட்டை பள்ளியப்பன் தெருவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான அருணாசலேஸ்வரர் வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது.இந்த கோயிலில் கடந்த 2016 ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை கணக்காளராக இருந்தவர் பொன்னேரி பகுதியை சேர்ந்தவர் பிரபாகர்(44).

அப்போது இந்த கோயிலில் சுமார் 15 ஊழியர்கள் பணிப்புரிந்து வந்துள்ளனர்.இவர்களுக்கு பண்டிகை காலங்களில் சிறப்பு தொகையாக ஒதுக்கப்படும் சம்பள பணத்தை ஊழியர்களுக்கு தராமல் கணக்காளராக இருந்த பிரபாகர் சுமார் 3லட்சத்து 34ஆயிரம் ரூபாய் கையாடல் செய்துள்ளார். இது தொடர்பாக தற்போது புதியதாக செயல் அலுவலராக பதவியேற்ற ராதாமணி இந்த மோசடியை கண்டறிந்து இது தொடர்பாக யானைகவுனி காவல் நிலையத்தில் பிரபாகர் மீது புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து பிரபாகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.