உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ராவின் லொஹியபுல் (Lohiya pul) அருகில் உள்ள கால்வாயில் காதல் ஜோடி ஒன்று குதித்து தற்கொலைக்கு முயன்றது.
இதில், காதலி காவல் துறையினரால் மீட்கப்பட்டு அப்போலோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார். மறுநாள் தீயணைப்பு, மீட்பு படையினரின் தீவிர தேடலுக்குப்பின் ஃபரிதாபாத்தில் உள்ள கேரிபுல் (Kheri Pul) பகுதியில் காதலனின் உடல் மீட்கப்பட்டது.
பின்னர் காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டதில் இறந்தவரின் பெயர் தேவேந்தர் (18) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. காதலுக்கு வீட்டில் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
உடன் தற்கொலைக்கு முயன்ற பெண் சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து தற்போது வீடு திரும்பியுள்ளார்.