ETV Bharat / jagte-raho

பறக்கும் ரயிலில் இருந்து குதித்த இளைஞர் - சாலையில் விழுந்து உடல் சிதறி உயிரிழப்பு! - பறக்கும் ரயில்

வேளச்சேரி முதல் கடற்கரை வரை செல்லும் பறக்கும் ரயில் சேப்பாக்கத்தை கடக்கும் வேளையில், அதிலிருந்த 18 வயது இளைஞர் கீழே குதித்து தற்கொலை செய்துள்ளார்.

teen suicide by stepping out from train, chennai train suicide, chennai news, chennai suicide news, சென்னை ரயில் தற்கொலை, சென்னை செய்திகள், சென்னை இளைஞர் தற்கொலை, ரயிலில் இருந்து விழுந்து தற்கொலை, சென்னை தற்கொலை, சென்னை செய்திகள்
teen suicide by stepping out from train
author img

By

Published : Jan 10, 2021, 8:37 AM IST

Updated : Jan 10, 2021, 9:01 AM IST

சென்னை: சேப்பாக்கத்தில் பறக்கும் ரயிலில் இருந்து கீழே குதித்து 18 வயது இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி செல்லும் பறக்கும் ரயில் இரவு 9 மணிக்கு சென்று கொண்டிருந்தது. சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலை அரசு அலுவலர்கள் குடியிருப்பு அருகே சென்றபோது இளைஞர் திடீரென ரயிலில் இருந்து கீழே குதித்தார்.

இதில் சாலையில் விழுந்து தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த திருவல்லிக்கேணி காவல் துறையினரும், ரயில்வே காவல் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து இளைஞரின் உடலைக் கைப்பற்றி ஓமந்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் ரயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டவர் சென்னை சவுகார்பேட்டை கோவிந்தப்ப நாயக்கன் தெருவைச் சேர்ந்த காந்திலால் மகன் ஜெகதீஸ் (18) என்பது தெரியவந்தது. பெற்றோர் திட்டியதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது காதல் விவகாரமா? என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சவுகார்பேட்டையில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு: கைதான 6 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

Last Updated : Jan 10, 2021, 9:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.