மேற்கு வங்கத்தின் கிழக்கு மெடினிபூரைச் சேர்ந்த ஒருவர் தனது இரண்டாவது மனைவிக்கு தன்னுடைய சொந்த நிலத்தைக் கொடுத்துள்ளார். ஆனால், இந்த விஷயம் முதல் மனைவிக்கோ, அவரின் பிள்ளைகளுக்கோ தெரியாது என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த இடத்தில் முதல் மனைவியின் மகன் வீடு கட்ட திட்டமிட்டு பணிகளைத் தொடங்கியுள்ளார். அப்போது சில பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. இதனால் கோபமடைந்த முதல் மனைவியின் மகன், தனது தந்தையின் இரண்டாவது மனைவியை நிர்வாணமாக்கி, கொலைசெய்ய முயற்சி செய்துள்ளார்.
இதுகுறித்து கேஜூரி காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகாரளித்துள்ளார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். தற்போது அப்பெண்ணை நிர்வாணமாக்கி கொலைசெய்ய முயற்சி செய்த வீடியோ வெளியாகியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஊரடங்கிலும் அடங்காத புள்ளிங்கோ: மூன்று சக்கர வாகனத்தில் சென்ற நபரிடம் வழிப்பறி!