கன்னியாகுமரி: 45 வயது மதிக்கத்தக்க ஆண் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நாகர்கோவிலை அடுத்த என்.ஜி.ஓ காலனியில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியின் பின்பக்கத்திலுள்ள மைதானம் ஒன்றில், சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த எலும்புக் கூட்டின் அருகில் வேட்டி, செருப்பு ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த நபர் இறந்திருக்கலாம் எனக் காவல் துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்த தகவல்கள் இன்னும் தெரியவில்லை. அவரது மரணமும் எப்படி நடந்தது என்பது தெரியாத நிலையில், நாகர்கோவில் காவல் துணை கண்காணிப்பாளர் வேணுகோபால் தலைமையிலான சுசீந்திரம் காவல் துறையினர் எலும்புக்கூட்டைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.