சேலம் மாவட்டம் வெள்ளாளபட்டியை சேர்ந்தவர் ஜேசிபி ஓட்டுனர் அசாருதீன். இவர் ஈரோட்டிற்கு வேவை நிமித்தமாக சென்றுள்ளார். அவர் வேலை பார்த்து வந்த பகுதியில் வசித்து வரும் பத்தாம் வகுப்பு மாணவியை சில நாட்களாகவே நோட்டமிட்டு வந்துள்ளார். இந்நிலையில், மாணவி பள்ளிக்கு சென்று விட்டு மீண்டும் அதே வழியாக வீடு திரும்புவதையும், மாணவியின் நடவடிக்கைகள் அனைத்தையும் கண்காணித்து அறிந்து கொண்ட அசாருதீன் சிறுமியை கடத்த திட்டம் தீட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மாணவி வழக்கம் போல் பள்ளிக்கு சென்று மாலை வீடு திரும்பிய போது அசாருதீன் மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அங்கிருந்து தப்பி வீடு திரும்பிய மாணவி நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் எடுத்துக் கூறியுள்ளார்.
தனது மகள் பாதிக்கப்பட்டதை அறிந்து ஆத்திரமடைந்த பெற்றோர், சூரம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில், காவல் துறையினர் அசாருதீன் மீது போக்சோ, கடத்தல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.