ETV Bharat / jagte-raho

ரூ.26 கோடி ஜிஎஸ்டி கடன் மோசடி - ஒருவர் கைது - gst crime

26 கோடி ரூபாய் ஜிஎஸ்டி கடன் மோசடி செய்ததாக சென்னையைச் சேர்ந்த 58 வயதான மெட்டல் ஸ்கிராப் வர்த்தக நிறுவன இயக்குநரை, ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் துறையினர் கைது செய்தனர்.

26 crore rs GST fraud
26 crore rs GST fraud
author img

By

Published : Dec 25, 2020, 12:03 AM IST

சென்னை: 26 கோடி ரூபாய் ஜிஎஸ்டி கடன் மோசடி செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

போலி பரிவர்த்தனைகள் மூலம் பொய்யான வரிகளை கணக்கு காட்டி 26 கோடி ரூபாய் ஜிஎஸ்டி கடன் மோசடி செய்ததாக சென்னையைச் சேர்ந்த மெட்டல் ஸ்கிராப் வர்த்தக நிறுவன இயக்குநரை சென்னை வடக்கு ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர் எழும்பூர் கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டார். ஜனவரி 4ஆம் தேதி வரை அவர் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விரிவான விசாரணையை மேற்கொண்டு நிலையான ஆதாரங்களை சேகரித்த பின்னர் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

போலி நிறுவனங்களுடன் அவர் எந்தவிதமான பொருள்களையும் சேவைகளையும் பெறாமல் 150 கோடி ரூபாய்க்கு விலைப்பட்டியல் கணக்கு காட்டி 26 கோடி ரூபாய் ஜிஎஸ்டி கடனை மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக எந்தவொரு பொருள்களையும் சேவைகளையும் வழங்காமல் போலி நிறுவனங்கள், கைது செய்யப்பட்ட நபரின் வணிக நிறுவனத்திற்கு வரி விலைப்பட்டியலை வழங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட நபர் கடன் மோசடி செய்ததாக ஒப்புக்கொண்டார் என அலுவலர்கள் கூறுகின்றனர். ஜிஎஸ்டி கடன் மோசடிகள் தொடர்பாக சென்னை வடக்கு ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் துறை டிசம்பர் மாதத்தில் மேற்கொண்ட ஐந்தாவது கைது இது.

முன்னதாக டிசம்பர் 4 ஆம் தேதி, பெரியமெடுவைச் சேர்ந்த 31 வயது நபர் ரூ. 33 கோடி ஜிஎஸ்டி கடன் மோசடி செய்ததற்காக கைது செய்யப்பட்டார். இந்த மாதத்தின் பிற்பகுதியில் மற்றொரு வழக்கில் பிரபல ரெடிமேட் ஆடைகளின் நிர்வாக இயக்குநரும் மேலும் இரண்டு முக்கிய நபர்களும் ரூ.10 கோடி ஜிஎஸ்டி கடன் மோசடி செய்ததற்காக கைது செய்யப்பட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.