ராமநாதபுரம்: ரவுடியை பயங்கர ஆயுதங்களுடன் கொலை செய்ய வந்த கும்பல் காவல் துறையினரிடம் சிக்கியது.
ராமநாதபுரம் மாவட்டம் மேலபண்ணைகுளம் என்ற கிராமம் அருகே இரண்டு ரவுடி கும்பல் மோதிக்கொள்வதாக காவல் துறைக்கு கிடைத்த தகவலையடுத்து, அங்கு சென்ற காவல் துறையினர், ரவுடிகள் வந்த காரை பறிமுதல் செய்து சோதனையிட்ட போது பயங்கர ஆயுதங்கள் சிக்கின.
அதன்பின் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், சென்னையில் ஆவடியில் வசித்துவரும் மூவேந்திரன் தலைமையில் நான்கு பேர், அபிராமம் அருகே மணலூர் கிராமத்தைச் சேர்ந்த தற்போது சென்னை கொடுங்கையூரில் வசிக்கும் செந்திலை கொலை செய்யும் நோக்கில் வந்தது தெரியவந்தது.
பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை மரத்தில் கட்டிவைத்த மக்கள்
பணம் கேட்டு மிரட்டியதால், மூவேந்திரன் சென்னையிலிருந்து தனது கூட்டாளிகளை சேர்த்துக் கொண்டு செந்திலை கொலை செய்ய திட்டமிட்டது விசாரணையில் அம்பலமானது. காவல் துறை சரியான நேரத்தில் சென்றதால் கொலை சம்பவம் தடுக்கப்பட்டது.
பிடிபட்ட அனைவரின் மீதும் சென்னையிலுள்ள காவல் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், கரோனா என்பதால் அனைவரும் தங்களது சொந்த ஊர்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
ஆறு பேரையும் கைது செய்த காவல் துறையினர் அவர்களிடமிருந்த தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள், ஒரு துப்பாக்கி, ஒரு வாள், மூன்று அரிவாள், கார் ஆகியவற்றை கைப்பற்றினர். பின்னர் அவர்களை கரோனா பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.
மருத்துவர் கண்ணன் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கைகள் எங்கே? உயர் நீதிமன்றம் கேள்வி
பின்னர், ஆறு பேரும் கமுதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கரோனா பரிசோதனை முடிவுகள் வரும் வரை அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவர் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.