ETV Bharat / jagte-raho

தொடர்ந்து வெறுப்பை உமிழும் சிவசேனா: முன்னாள் கடற்படை அலுவலர் மீது கடும் தாக்குதல்! - சிவசேனா நிர்வாகிகள் கைது’

முன்னாள் கடற்படை அலுவலர் மதன் சர்மா அண்மையில் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே குறித்து கேலிச்சித்திரம் ஒன்றை பகிர்ந்ததற்காக சிவசேனா தொண்டர்களால் கடுமையாக தாக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கில் நான்குக்கும் மேற்பட்ட சிவசேனா தொண்டர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Retd Navy officer beaten up by shivsena
Retd Navy officer beaten up by shivsena
author img

By

Published : Sep 12, 2020, 2:45 PM IST

மும்பை: மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே குறித்த கேலிச்சித்திரத்தை பகிர்ந்ததாக ஓய்வுபெற்ற கடற்படை அலுவலரை கடுமையாக தாக்கிய சிவசேனா முக்கிய பிரமுகர், கட்சி நிர்வாகிகள் உள்பட நான்குக்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

மும்பையின் கொண்டிவாலி கிழக்கில் முன்னாள் கடற்படை அலுவலர் மதன் சர்மா அண்மையில் மகாராஷ்டிரா முதலமைச்சரும், சிவசேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரேவை குறித்து கேலிச்சித்திரம் ஒன்றை பகிர்ந்ததற்காக சிவசேனா தொண்டர்களால் கடுமையாக தாக்கப்பட்டார்.

பிறந்த குழந்தைக்கு காலாவதி மருந்தை செலுத்திய அரசு மருத்துவமனை...

இச்சூழலில் மதன் சர்மா தாக்கப்படும் காணொலியை பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் அதுல் பட்கல்கர் சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். அந்த காணொலி பதிவில் ஆறு பேர் சேர்ந்து மதன் சர்மாவை கடுமையாக அடித்து உதைக்கிறார்கள். அவரது வீட்டில் இருந்து பிடித்து தரதரவென இழுத்துச்செல்கிறார்கள். கன்னத்தில் அறைகிறார்கள். இந்த சம்பவம் குறித்து அந்த காணொலி பதிவு தெளிவாக விளக்கியிருந்தது.

முன்னாள் கடற்படை அலுவலர் மீது வெறிகொண்டு தாக்குதல் நடத்தும் சிவசேன்னா கட்சி நிர்வாகிகள்

இது தொடர்பான புகாரை அடுத்து, சம்தா நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த தாக்குதல் நடந்த சில மணி நேரங்களுக்குள், சிவசேனாவின் உள்ளூர் பிரமுகரான கமலேஷ் கதம், சிவசேனா தொண்டர் சஞ்சய் மஞ்ச்ரே உள்பட நான்குக்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

நாட்டின் முதல் நீர்மின் நிலையம்!

முன்னதாக, மகாராஷ்டிராவை ஆளும் சிவசேனா நடிகை கங்கனா ரணாவத் உடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்த நிலையில், மும்பையில் உள்ள அவரது அலுவலகத்தின் ஒரு பகுதியை இடித்து தரைமட்டம் ஆக்கியது. இவ்வேளையில் முன்னாள் கடற்படை அலுவலரை சிவசேனா தொண்டர்கள் தாக்கியிருப்பது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.