ETV Bharat / jagte-raho

திருடுபோன 400 சவரன் நகையில் 200 சவரன் நகைகள் மீட்பு: 7 பேர் கைது - 200 சவரன் நகைகள் உரியவரிடம் ஒப்படைப்பு

திருவள்ளூர்: மீஞ்சூர் அருகே கொள்ளை போன 400 சவரன் நகையில் 200 சவரன் நகைகள் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

police
police
author img

By

Published : Nov 24, 2020, 10:47 PM IST

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த மேட்டுப்பாளையத்தில் விவசாயி உஷா என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து கடந்த ஜனவரி 9ஆம் தேதி 460 சவரன் நகைகள் கொள்ளை போனது. இச்சம்பவம் குறித்து மீஞ்சூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இரண்டு தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய யுவராஜ், போன்டா மணி உள்ளிட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்து நடத்திய விசாரணையில், கொள்ளையடித்த நகைகளை பல கடைகளில் அடகு வைத்தது தெரிய வந்தது. அடகு கடைகளில் வைக்கப்பட்ட 200 சவரன் நகைகளை காவல்துறையினர் மீட்டனர். நகைகளை அடகு வைத்ததால் கிடைக்கப்பட்ட 13.5 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், அந்த பணத்தில் வாங்கிய கார், பைக் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்ந்து கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்ட நகைகளை மீஞ்சூர் காவல் நிலையத்தில் வைத்து உரிமையாளர் உஷாவிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் ஒப்படைத்தார். கைது செய்யப்பட்ட ஏழு பேரையும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: நிவர் புயல்: தரங்கம்பாடியில் கடல் அலை சீற்றம் - அச்சப்படும் மீனவர்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.