ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இளம் பெண் ஒருவர் தனது மகளுடன் வசித்துவந்தார். இவரின் வீட்டுக்குள் அத்துமீறி சென்ற லேக்ராஜ் என்பவர், அப்பெண்ணின் வாயில் மதுவை ஊற்றி பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இது குறித்து யாரிடமாக கூறினால் கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கணவரிடம் தெரிவித்தார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் நடந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகார் குற்றஞ்சாட்டப்பட்ட லேக்ராஜ்க்கு தெரியவரவே, மீண்டும் அப்பெண்ணின் வீட்டுக்கு சென்ற அவர், பெட்ரோல் ஊற்றி அவரின் வீட்டை தீயிட்டு கொளுத்தினார்.
இதில் அப்பெண் தனது மகளுடன் உடல் கருகி தீக்காயமுற்றார். அவரின் தலைப்பகுதியில் தீக்காயம் ஏற்பட்டது. இந்நிலையில் ஜெய்ப்பூர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இது குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, பாலியல் பலாத்காரம் மற்றும் வீட்டை எரித்ததாக குற்றவாளிகள் லேக்ராஜ் மற்றும் அவனது கூட்டாளிகள் மூவரை கைது செய்தனர்.
இந்நிலையில், இந்தச் சம்பவத்துக்கு காவலர்கள்தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று கூறிய பெண்ணின் குடும்பத்தினர், லேக்ராஜ் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆகவே அவர் மீது நடவடிக்கை எடுக்க காவலர்கள் தாமதித்துவிட்டனர்” என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: பள்ளி மாணவியைக் கடத்தி பாலியல் வன்புணர்வு செய்தவர் கைது!