சவுகார்பேட்டையில் கடந்த 11 ஆம் தேதி தலீல் சந்த், புஷ்பா பாய் மற்றும் அவர்களது மகன் ஷீட்டல் குமார் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கைலாஷ், ரவீந்திரநாத் கர் மற்றும் விஜய் உத்தம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஷீட்டல் குமாரின் மனைவி ஜெயமாலா, அவரது சகோதரர் விலாஸ் மற்றும் ராஜு ஷிண்டே ஆகியோரை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
குற்றவாளிகள் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருவதோடு, அவர்கள் தப்பிச்சென்ற வாகனத்தையும் பயன்படுத்தாமல் எங்கோ ஒரு இடத்தில் மறைத்து வைத்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், அவர்களை பிடிப்பதற்காக ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவில் தனிப்படையினர் முகாமிட்டுள்ளனர். குறிப்பாக மகாராஷ்டிர மாநிலம் பூனேவில் குற்றவாளிகளுடன் தொடர்புடைய 10 பேரை பிடித்து அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேநேரம் கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரருடையது என்பது தெரிய வந்துள்ளதால், அவரிடமும் தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: திருநெல்வேலியில் பெண் கொலை: திருமணத்தை மீறிய உறவு காரணமா?