ETV Bharat / jagte-raho

2019இல் 24,000 பேர் ரயில் சார்ந்த விபத்துகளில் உயிரிழப்பு!

ரயில் சார்ந்த விபத்துகளில் கடந்தாண்டு 24 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவர தகவல்கள் கூறுகின்றன.

Indian Railways NCRB National Crime Records Bureau Accidents Railway Accidents Deaths Collision இந்திய ரயில்வே விபத்து தேசிய குற்ற ஆவண காப்பகம் விபத்து உயிரிழப்பு என்சிஆர்பி

author img

By

Published : Sep 4, 2020, 9:59 PM IST

டெல்லி: கடந்தாண்டு 27 ஆயிரத்து 987 ரயில்வே விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 76.3 விழுக்காடு விபத்துகள் ரயில்வே தண்டவாளங்களில் நிகழ்ந்துள்ளன என்று தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளிவிவர தகவல்கள் கூறுகின்றன.

மேலும் இந்த விபத்துகளில் கடந்தாண்டு 24 ஆயிரத்து 619 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ரயில்களில் இருந்து விழுவது அல்லது ரயில்வே பாதையில் சென்ற நபர் மீது மோதல் என 21 ஆயிரத்து 361 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.

ரயில்வே விபத்துகள் அதிகம் நிகழ்ந்த மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அங்கு ஆறு ஆயிரத்து 388 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதற்கு அடுத்த இடத்தில் உத்தரப் பிரதேசம் உள்ளது.

இங்கு மூன்று ஆயிரத்து 980 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில் கடந்த மூன்று ஆண்டுகளில் ரயில்வே தண்டவாளத்தை முன்னெச்சரிக்கையின்றி கடப்பது உள்ளிட்ட விபத்துகளால் 30 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து தனது கவலையை நிதி ஆயோக் தலைமை செயல் அலுவலர் அமிதாப் காந்த் வெளிப்படுத்தியிருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க: ஓடிடி தளத்தில் வெளியாகும் 'நுங்கம்பாக்கம்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.