ETV Bharat / jagte-raho

தள்ளுவண்டி திருடியவரை கண்டுபிடித்து கொடுத்தும் கைது செய்யாத காவல் துறை

author img

By

Published : Jan 22, 2020, 7:02 PM IST

சென்னை: தள்ளுவண்டியில் வைத்திருந்த 3 சவரன் நகை மற்றும் பணத்தைத் திருடிச் சென்ற நபரை கைது செய்யக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் தம்பதி ஒன்று புகாரளித்துள்ளது.

theft
theft

சாந்தோம் ஜோனகான் தெரு ஓரத்தில், சிற்றுண்டிக் கடை நடத்திவருபவர் ஜெயராமன் (55). இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு வீடு இல்லாததால் தள்ளுவண்டியில் பொருட்கள் அனைத்தையும் வைத்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஒன்றாம் தேதி வழக்கம் போல் அகில இந்திய வானொலி மையம் அருகே பொருட்கள் அனைத்தையும் தள்ளுவண்டியில் வைத்துவிட்டு, இருவரும் தெருவோரத்தில் உறங்கியுள்ளனர். கண் விழித்து பார்க்கும்போது தள்ளுவண்டி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், அதிலிருந்த 3 சவரன் நகை மற்றும் 14,500 ரூபாய் பணத்தையும் சேர்த்து அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

இந்நிகழ்வு தொடர்பாக மெரினா கடற்கரை காவல் துறையினரிடம், ஜெயராமன் புகார் அளித்தார். மேலும், தள்ளுவண்டியை திருடிய நபர் செம்மஞ்சேரியில் பதுங்கி இருப்பதை கண்டுபிடித்தும் கொடுத்துள்ளார். ஆனால், திருடிய நபரை காவலர்கள் விசாரிக்காமல் அனுப்பிவைத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயராமன், ” திருட்டு குறித்து 20 நாட்களாகியும் எந்த வித நடவடிக்கையும் மெரினா காவலர்கள் எடுக்கவில்லை. சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்யவில்லை. மேலும், திருடப்பட்ட நகை மற்றும் பணத்தை விரைவில் கண்டுபிடித்து தரவேண்டும் “ என்று கூறினார்.

திருட்டு குறித்து 20 நாட்களாகியும் எந்த வித நடவடிக்கையும் மெரினா காவலர்கள் எடுக்கவில்லை

இதையும் படிங்க: நில மோசடி - மூன்று பேர் மீது புகார்

Intro:Body:தள்ளுவண்டியில் வைத்திருந்த 3சவரன் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபரை உடனே கைது செய்யக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் தம்பதியினர் புகார்.

சென்னை சந்தோம் ஜோனகான் தெரு பிளாட்பாரத்தில் தங்கி தெருவோரம் டிபன் கடை நடத்தி வருபவர் ஜெயராமன்(55).இவரது மனைவி முத்துலட்சுமி.இவர்களுக்கு வீடு இல்லாததால் தள்ளுவண்டியில் பொருட்கள் அனைத்தையும் வைத்து வாழ்ந்து வந்துள்ளனர்.. இந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி வழக்கம் போல் அகில இந்திய வானொலி மையம் அருகே பொருட்கள் அனைத்தையும் தள்ளுவண்டியில் வைத்து இருவரும் பிளாட்பாரத்தில் உறங்கி உள்ளனர். பின்னர் விழித்து பார்க்கும்போது அருகே இருந்த தள்ளுவண்டி காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளார். மேலும் அதில் இருந்த 3சவரன் நகை மற்றும் 14,500 ரூபாய் பணத்தையும் சேர்த்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மெரினா கடற்கரை போலீசாரிடம் ஜெயராமன் புகார் அளித்து உள்ளார். மேலும் தள்ளுவண்டியை திருடிய நபர் செம்மேஞ்சேரியில் பதுங்கி இருப்பதை கண்டுபிடித்தும் கொடுத்து உள்ளனர். ஆனால் திருடிய நபரை போலீசார் விசாரிக்காமல் அனுப்பி வைத்ததாக தெரியவந்தது. பின்னர் 20 நாட்களாகியும் எந்த வித நடவடிக்கையும் மெரினா போலீசார் எடுக்கவில்லை எனவும்,சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்யவில்லை என்று தற்போது காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜெயராமன் புகார் அளித்துள்ளார்.

மேலும் அவர் திருடி சென்ற நகை மற்றும் பணத்தை கூடிய விரைவில் கண்டுபிடித்து தருமாறு அவர் கூறினார்.

பேட்டி :ஜெயராமன்,முத்துலட்சுமி (தம்பதியினர் பாதிக்கப்பட்டவர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.